Thursday, January 19, 2012

மேதை படம் பார்த்த மாமேதைகள்

v
  
                                       I am back
இந்த பொங்கலை வாழ்கையில் மறக்க முடியாத தினம் ஆக்கிய நண்பர்கள் பிரபா மற்றும் சிவகுமாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

பொங்கலுக்கு முந்தைய நாள் நான் குத்துமதிப்பா போதையில் இருக்கும் போது . பிரபா மற்றும் சிவாவிடம் அவர்களுடன் படத்திற்கு வருவதாக வாக்கு குடுத்து தொலைத்துவிட்டேன் .அதன் வீரியம் எனக்கு அப்போது தெரியாது .காலையில் பிரபா செல்லியவுடன்தான் எனக்கு புரிந்தது மேதை படம்பார்க்க நான் ஒத்துகொண்ட விஷயம்  . ராத்திரி கொஞ்சம் ஓவர்தான் போல  ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

இருந்தாலும் குடுத்த வாக்கை காப்பாற்ற எண்ணி கடமை வீரனாக அவருடன் கிளம்பினேன் .காலையில் இருந்தே சிவா போன் மேல போன் போட்டு எழுந்தாச்சா? பல்லு வேளக்கியாச்சா? ஆயி போயாச்சா ? சட்டை போட்டாச்சா? என்று எல்லாத்தையும் விசாரித்து கொண்டிருந்தார் . பாவம் அந்த புள்ள டிக்கட் எடுக்க அதிகாலை எழுந்து தியேட்டர் வாசலில் போயி நிக்குது ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  

 பொங்கல் வாழ்த்து சொல்ல என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது . பேச்சுவாக்கில் இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என்று கேட்டான் . நானும் சாதாரணமாக மேதை படம் பார்க்க போகிறேன் என்றேன் .
மறுமுனையில் நீண்ட நிசப்தம் . பிறகு மெதுவானகுரலில். ஏன் என்ன ஆச்சி வீட்டில் எது பிரச்சனையா ? மனசு ஏதும் சரியில்லையா ? நீ உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வந்திரு எதுவாக இருந்தாலும் நேரில்  பேசி கொள்ளலாம் அவசரபட்டு எந்த தவறான முடிவும் எடுக்காதே என்று சொல்லிக்கொண்டே போனான் . எனக்கு ஒன்றும் புரியவில்லை------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

ஒருவழியாக படம் ஓடும் கிருஷ்ணவேணி திரை அரங்கை  வந்து அடைந்தேன். அங்கே சிவா திரை அரங்கை சுற்றி சுற்றி போட்டோ எடுத்து கொண்டிருந்தார் . வண்டியை நிறுத்திவிட்டு தியேட்டர் உள்ளே நுழைந்தோம் அங்கே நான் கண்ட காட்சி ....ஆங்கிலபடத்தில் வரும் நடைபினங்களை போல் வெறித்த பார்வையுடன் எங்களை எல்லோரும் உற்று பார்த்துகொண்டிருந்தார்கள் . அனைவரும் நாற்ப்பது ஐம்பதை கடந்தவர்கள் எங்களை அவர்கள் விநோதமாக பார்ப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. ஏதோ ஷக்கீலா படத்திற்கு வந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனை பார்ப்பது போல் இருந்தது .என் நண்பன் ஏன் அப்படி போனில் பேசினான் என்று எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தது அனைவரும்  ஏதோ விதத்தில் வாழ்க்கையை வெறுத்தவர்கள் என்று நினைக்கிறேன் தங்களை ரட்சிக்க ஒரு நல்ல தலைவனை தேடி தியேட்டர் தியேட்டராக போவார்கள்  போலும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                                   ராமராஜனின் தீவெறி ரசிகன்

பிரபா மட்டும் ஒரு தேனியின் சுறுசுறுப்போடு சுற்றிகொண்டிருந்தார் . கேட்டை திறந்தவுடன் முண்டியடித்து அனைவரையும் வயதானவர்கள் என்றுகூட பாராமல் ஏறி மிதித்து முதல் ஆளாக டிக்கட் எடுத்துகொண்டு வந்து அதை  காட்டும் போது பிரபா முகத்தில் ஒரு ஒளியை பார்த்தேன் . நித்தியானந்தா போஸ்டரில் அவரது சிஷ்ய கேடிகள் வரைவார்களே அதை விட பிரகாசமான ஒளியை அன்று பிரபா முகத்தில் பார்த்தேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  
        அனைவரையும் மிதித்து பிரபா முன்னேறிய காட்சி

படம் ஆரம்பித்தவுடன் ஆரத்தி எடுக்கும் ரசிகனை நான் ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்த போது .என் அருகில் இருந்தவர் வினோதமான  ஒலி எழுப்பி சிரித்து கொண்டிருந்தார் . என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை .பின்னால் திரும்பி பார்த்தேன் அங்கே ஒருவர் இந்தியன் டாயலட்டில் இருப்பது போல் சீட்டுக்கு மேலே குத்த வைத்து அமர்ந்திருந்தார் .படம் முடியும்வரை அவர் அப்படிதான் இருந்தார் . பிரபாவிற்கு அருகில் இருந்தவர் எம்.ஜி.ஆர். போட்டோவை திரையில் காட்டும் போதெல்லாம் கைதட்டிகொண்டிருந்தார் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?
       
குணா படத்தில் கமல் கதாநாயகியிடம் லட்டு வாங்க போகும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே போன்றதொரு நிலையில் தான் நானும் இருந்தேன் .அதனால் படத்தைப்பற்றி விமர்சனம் எதிர்பார்ப்பவர்கள் இங்கே செல்லவும்   அது முடியாதென்றால் இங்கே செல்லவும் இல்லை என்றால் எங்கேயோ போகவும் நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும்  பக்குவபடவில்லை ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                   மேதையை இயக்கிய மாமேதை

படத்தின் இடைவேளையின் போது இந்த படத்தின் இயக்குனர் சரவணன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது .
எங்களோடு கைகுலுக்கி கட்டிபிடித்து சிறிது  நேரம் பேசி கொண்டிருந்தார் . அதை பற்றி பின்னர் பதிவிடுகிறேன் .
படம் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று அன்புகட்டளை போட்டார் .
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எந்த நாட்டு படத்திலும் எடுக்காதது . அம்பேத்காருக்கு தோன்றாத ஒரு புதுவிதமான சிந்தனை இயக்குனருக்கு தோன்றி உள்ளது பாராட்ட படவேண்டிய விஷயம். வில்லன்களுக்கு நீதிபதி குடுக்கும் தண்டனை  இந்தியன் பீனல் கோடு மட்டும் அல்லாது ஜெர்மன் ,இத்தாலி,பிரான்ஸ்,டென்மார்க்,பங்களாதேஷ்,அமேரிக்கா என்று அத்தனை நாட்டு கோடுகளும் சிந்திக்க வேண்டிய புதுமை
அதை நீங்கள் திரையில்தான் பார்க்கவேண்டும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

படம் பார்த்து மூன்று நாள் ஆகியும் பதிவிட ஏன் லேட்டு என்று கேட்கக்கூடாது .இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .எனக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை நான் முன்பை விட ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கிறேன். நீங்களும் இந்த படம் பார்த்து பரவசநிலை அடையுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


45 கருத்து சொல்றாங்க:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா..... வரிக்கு வரி நக்கல் தான்...

ஏனப்பா நான் சரியாத்தான் கமென்ட் போடறேன்னா??

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்பவும் படத்துக்கு விமர்சனம் தான் எழுதுவாங்க...

ஆனா இங்க இடம், பொருள், ஏவல், என எல்லாமே எழுதராங்களே....

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா..... வரிக்கு வரி நக்கல் தான்...

ஏனப்பா நான் சரியாத்தான் கமென்ட் போடறேன்னா??
//////////////////////

வாங்க வாங்க ...ஆனந்த தொல்லை நாம் எப்போது பார்க்க போகலாம் ?

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்பவும் படத்துக்கு விமர்சனம் தான் எழுதுவாங்க...

ஆனா இங்க இடம், பொருள், ஏவல், என எல்லாமே எழுதராங்களே....
/////////////////////////////////

அதான் சொல்லிட்டேனே இதற்க்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை

இன்னும் பவர் ஸ்டார் படங்களை தொடர்ந்துபார்த்து பயிற்சி எடுக்கணும் ...............

கோவை நேரம் said...

ம்ம்,,,சரியாதான் எழுதி இருக்கீங்க....மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி
ஆயிடீங்களே...ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி.

அஞ்சா சிங்கம் said...

கோவை நேரம் said...

ம்ம்,,,சரியாதான் எழுதி இருக்கீங்க....மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி
ஆயிடீங்களே...ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி.....///
//////////////////////////

எல்லாம் சவகாச தோஷம் ............

Unknown said...

மாப்ள why this கொலவெறி...அண்ணன் பசு நேசனை பற்றி ஒன்றும் சொல்லாததற்க்கு கண்டனங்கள்..ஏம்பா நான் சரியாத்தான் பேசுரனா!

Anonymous said...

//என் அருகில் இருந்தவர் வினோதமான ஒலி எழுப்பி சிரித்து கொண்டிருந்தார் //

அவர் அநேகமாக விதியின் பினாமியாக இருப்பார்..

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

மாப்ள why this கொலவெறி...அண்ணன் பசு நேசனை பற்றி ஒன்றும் சொல்லாததற்க்கு கண்டனங்கள்..ஏம்பா நான் சரியாத்தான் பேசுரனா!.......////////////////////
/////////////////////////////////////

மாப்பு அவரை சொல்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கு ...

ஒன்னு வேணும்னா சொல்லலாம் அவரு பார்ப்பதற்கு கண்ணாடி போடாத நம்ம கேபுள்ஷங்கர் மாதிரி இருக்காரு

Anonymous said...

இயக்குனர் சந்திப்பு ஸ்டில்லை தங்க பிரேம் போட்டு வீட்ல மாட்டி வக்கணும் தலைவா!!

Unknown said...

ஏன்யா உங்க மூனு பேரயும் பாத்து அந்த கூட்டம் பயந்து போச்சி போல..என்னடா இது தாவர ச்சே தீவிரவாதிங்க போலன்னு ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

//என் அருகில் இருந்தவர் வினோதமான ஒலி எழுப்பி சிரித்து கொண்டிருந்தார் //

அவர் அநேகமாக விதியின் பினாமியாக இருப்பார்..////
நாம் எல்லோரும் பாண்டிமடத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ....

Lollu Guru said...

படம் பாத்ததுக்கு அப்புறமாவது போதை தெளிந்ததா?
இதுவரைக்கும் சரியா பேசுன மாதிரி தெரியல.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

இயக்குனர் சந்திப்பு ஸ்டில்லை தங்க பிரேம் போட்டு வீட்ல மாட்டி வக்கணும் தலைவா!!..///////
/////////////////////////
ஏன் எனக்கு விவாகரத்து ஆகணுமா?

அஞ்சா சிங்கம் said...

Lollu Guru said...

படம் பாத்ததுக்கு அப்புறமாவது போதை தெளிந்ததா?
இதுவரைக்கும் சரியா பேசுன மாதிரி தெரியல....//////////
//////////////////////

இது போதை இல்லை ஒரு வகையான பரவச நிலை அனுபவித்தால்தான் தெரியும் ..

வாங்களேன் ஒருவாட்டி மேதை பார்க்கலாம் ..........

நாய் நக்ஸ் said...

Marana thekiriyam
kelvi pattirukken.....

Athai...neenga
anupavitha udan.....
Purinthu konden.....

Ithu mathiri
16 padam parthu
peru vazhvu vazha
vazhthukkal....

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...
////////////////

எப்பா ஏன்னா வில்லத்தனம் ..............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ அஞ்சா சிங்கம் என நிருபித்துவிட்டாய் :)

rajamelaiyur said...

//இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .எனக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை நான் முன்பை விட ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கிறேன். நீங்களும் இந்த படம் பார்த்து பரவசநிலை அடையுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்//

Why this kolaveri ?

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

நண்பன் VS வேட்டை

சேலம் தேவா said...

//இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .//

அடப்பாவமே...ஒருதடவை படம் பாத்ததுக்கே அந்த தியேட்டர் ஆப்பரேட்டரை நினைச்சா... :)

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ அஞ்சா சிங்கம் என நிருபித்துவிட்டாய் :)
/////////////////////////////////////////////

போங்க பாஸ் நீங்க ரொம்ப புகழுறீங்க ...............

அஞ்சா சிங்கம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Why this kolaveri ? ...............///////////////////////

இது ஆசீர்வாதம் .........

அஞ்சா சிங்கம் said...

சேலம் தேவா said...

//இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .//

அடப்பாவமே...ஒருதடவை படம் பாத்ததுக்கே அந்த தியேட்டர் ஆப்பரேட்டரை நினைச்சா... :)
///////////////////////////////////////////////

அவருக்கு தியாகிகள் பென்சன் கண்டிப்பா கிடைக்கும் .................

Ponchandar said...

அந்த ஆரத்தி எடுத்தது படத்தோட டைரக்டர் தானே ?????

ஆனந்தத் தொல்லை படம் பார்க்கிற வரைக்கும் இரவில் நீங்கள் அலறுவது நிச்சயம். பார்த்த பின் ... ஹி .. ஹி ...ஹி.... உங்களுக்கு புரியும்....

அஞ்சா சிங்கம் said...

Ponchandar said...

அந்த ஆரத்தி எடுத்தது படத்தோட டைரக்டர் தானே ?????

ஆனந்தத் தொல்லை படம் பார்க்கிற வரைக்கும் இரவில் நீங்கள் அலறுவது நிச்சயம். பார்த்த பின் ... ஹி .. ஹி ...ஹி.... உங்களுக்கு புரியும்..../////////////////////////

அது எப்போ சார் ரிலீஸ் ஆகும் யாராவது கேட்டு சொல்லுங்க ..............

Unknown said...

மாமேதைகளுக்கு தலைவணங்குகிறேன்..

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மாமேதைகளுக்கு தலைவணங்குகிறேன்..../////////////

அண்ணே ஊருக்குள்ள கலவரம் நடந்துகிட்டு இருக்கு நீங்க இங்க என்ன பண்றீங்க ,,,,,,,,,,,,,?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே.... ஒரு மேதையே மேதை படம் பார்த்திருக்கிறதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பொங்கலுக்கு முந்தைய நாள் நான் குத்துமதிப்பா போதையில் இருக்கும் போது . பிரபா மற்றும் சிவாவிடம் அவர்களுடன் படத்திற்கு வருவதாக வாக்கு குடுத்து தொலைத்துவிட்டேன் ////

படமும் போதைல தானே, அப்புறம் ஏன் பீதி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காலையில் இருந்தே சிவா போன் மேல போன் போட்டு எழுந்தாச்சா? பல்லு வேளக்கியாச்சா? ஆயி போயாச்சா ? சட்டை போட்டாச்சா? என்று எல்லாத்தையும் விசாரித்து கொண்டிருந்தார் . /////

ஆடு தப்பிச்சிட போவுதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஏதோ ஷக்கீலா படத்திற்கு வந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனை பார்ப்பது போல் இருந்தது .////

அப்போ எலிமெண்ட்டரி ஸ்கூல்லயே..... சரி விடுங்கண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே, எப்படியும் மாவீரன் நெப்போலியனையும் கூட கூட்டிட்டு போயிருப்பீங்க, அப்புறமுமா பிரச்சனை?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே.... ஒரு மேதையே மேதை படம் பார்த்திருக்கிறதே?..........///////////////
///////////

அடடா என்ன ஒரு பின்நவீனத்துவ கவிதை ...............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காலையில் இருந்தே சிவா போன் மேல போன் போட்டு எழுந்தாச்சா? பல்லு வேளக்கியாச்சா? ஆயி போயாச்சா ? சட்டை போட்டாச்சா? என்று எல்லாத்தையும் விசாரித்து கொண்டிருந்தார் . /////

ஆடு தப்பிச்சிட போவுதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை போல.....////
///////////////////////////////////
ஆமாம் தல மலை ஏறனும்னா மச்சினன் துணை வேணும்ன்னு சொல்லுவாங்க அது மாதிரி .

Philosophy Prabhakaran said...

ஓ அப்ப முந்தின நாள் நைட்டு சரக்கா...

Philosophy Prabhakaran said...

// ஏதோ ஷக்கீலா படத்திற்கு வந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனை பார்ப்பது போல் இருந்தது //

அதுக்கு கூட கெம்பீரமா தானே போவோம்...

Philosophy Prabhakaran said...

// கேட்டை திறந்தவுடன் முண்டியடித்து அனைவரையும் வயதானவர்கள் என்றுகூட பாராமல் ஏறி மிதித்து முதல் ஆளாக டிக்கட் எடுத்துகொண்டு வந்து அதை காட்டும் போது பிரபா முகத்தில் ஒரு ஒளியை பார்த்தேன் . //

ப்பூ... சில்லி மேட்டர்...

Unknown said...

க்ளைமேக்ஸ பத்தி சஸ்பென்ஸ் வெச்சு படத்த பாக்குற ஆவல தூண்டி விட்டுட்டீங்களே... நல்லாவே இருக்க மாட்டீங்க...

செல்வா said...

நான் சரியாத்தான் பேசுறேனா என்னனு தெரியலைங்க.

// அனைவரும் நாற்ப்பது ஐம்பதை கடந்தவர்கள் எங்களை அவர்கள் விநோதமாக பார்ப்பது எனக்கு சங்கடமாக இருந்தது//

என்னதான் இருந்தாலும் பெரியவங்களுக்கு மத்தியில நாங்களும் பசுநேசன மறக்கலை அப்படின்னு தகிரியமா நின்னு நிரூபிச்சிருக்கீங்கள்ல, அத நெனைச்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க :))))))

முத்தரசு said...

படித்தேன் மாமேதைகள் - போதை ஏத்திட்டு வாரேன்

Unknown said...

மாமேதைகளுக்கு தலைவணங்குகிறேன்..

சாவி said...

தல, நாம எல்லோருமா சேர்ந்து செத்து செத்து விளையாடுவோமா? (அதாவது பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை படத்துக்கு போவோமா?)


சாவி
யின் தமிழ் சினிமா உலகம்.

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

Anonymous said...

adadaaa romba sariyaaththaan paesuringa..

romba sirichi potten...


superaa irukku unga way of pathivu ,....

unga vimarsanam friends padam appuram super comedy film paartha sirippu

Anonymous said...

வணக்கம்

இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular Posts