ஐன்ஸ்டீன் தியரியை புரிந்து கொள்வது கடினம் அதை விட கடினம் அதை எளிமையாக விளக்கி சொல்லமுயற்சிப்பது
சென்ற பதிவு பன்னிகுட்டி -அறிவியல் அந்த மாதிரி ஒரு சிறு முயற்சிதான். இப்போது அலை துகள் கொட்பாட்டை எளிமையான உதாரணத்துடன் விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன் எப்படி பார்த்தாலும் பதிவு மிக பெருசாக இருக்ககூடாது இதுவரை சேர்த்து வைத்த உடன்பிறப்புகலான பாலோவர்ஸ் தெறித்து ஓடிவிட கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறேன் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஜெயதேவ்தாஸ் நல்ல கருத்துக்களை சொல்லிருந்தார் அவருக்கும் நம் நன்றிகள் ...........
ஆனால் இன்று கொஞ்சம் ரிலாக்ஸ் மூடுக்காக கவுண்டமணியை பற்றி நான் வலையில் சேகரித்த தகவல்கள் அப்படியே தருகிறேன்
பன்னிகுட்டி அறிவியல் அடுத்த பதிவு ஓக்கேவா ..............................
கவுண்டமணி பேன்சுக்காக .............
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்
சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...
'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!
கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!
பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!
அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!
மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!
உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!
திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!
சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!
ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!
கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!
ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!
கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!
எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!
டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!
'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!
சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!
நன்றி மகேந்திரன்.பெ
48 கருத்து சொல்றாங்க:
முதல் தடவை வடை எனக்கே!!
\\ஐன்ஸ்டீன் தியரியை புரிந்து கொள்வது கடினம் அதை விட கடினம் அதை எளிமையாக விளக்கி சொல்லமுயற்சிப்பது \\ George Gamow அவர்கள், பெரிய ஆள். ஆனாலும் நம்ம லெவலுக்கே புத்தகங்களை எழுதுபவர். அவருடைய
MR TOMPKINS IN WONDERLAND MR TOMPKINS EXPLORES THE ATOM
என்னும் புத்தகத்தை கீழேயுள்ள இணைய முகவரியிலிருந்து தரவிறக்கி படிக்கலாம். இயற்பியல் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கும் இது புரியும் என்பதுதான் விசேஷம்.
http://www.edocfind.com/download/ebook/MR%20TOMPKINS%20IN%20WONDERLAND%20MR%20TOMPKINS%20EXPLORES%20THE%20ATOM/aHR0cDovL3d3dy5hcnZpbmRndXB0YXRveXMuY29tL2FydmluZGd1cHRhL3RvbXBraW5zLnBkZg
இன்னைக்கு கவுண்டமணி பற்றிய செய்திகள் போட்டு திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள், நன்றி!! தமிழ் திரையுலகில் எத்தனையோ காமடியன்கள் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள், ஆனாலும் என்னுடைய ஆல் டைம் Favourite கவுண்டமணி அண்ணன்தான்!!
கவுண்டரை நேசிக்காதவர்கள் யாருமில்லை. அவர் மீடியா வெளிச்சத்தில் அதிகம் வராமல் இருப்பதே அவர் மீது உள்ள மதிப்பை அதிகரிக்கிறது.
இதுதான் அவரை தான் என்ற கர்வம் அற்றவராக காட்டுகிறது.அவருக்கு நிகர் அவரே! வித்யாசமான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
\\மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.\\ செந்தில் ஒரு பூஜ்ஜியம், அண்ணன் எண் ஒன்று போல, பூஜ்ஜியத்துக்கு முன்னால் ஒன்று இருந்தால் தான் அதற்க்கு மதிப்பு பத்து, இல்லாவிட்டால் வெறும் பூஜ்ஜியம் தான். ஒரு முறை கவுண்டமணி அண்ணன் ஹீரோவாக நடிக்கப் போய் மார்க்கெட் சரிந்தது, அப்போது செந்திலுக்கு முக்கியத் துவம் கொடுப்பது போல காட்சிகள் வைத்து படமெடுக்க ஆரம்பித்தார்கள், வேலைக்காகவில்லை, இதை உணர்ந்த செந்தில், அண்ணனிடம் உதை பட்டால் தான் தன் பிழைப்பு நடக்கும் என்றுணர்ந்து மீண்டும் வழிக்கு வந்தார்.!!
\\பக்கா சைவம்!\\வடிவேலு ஒரு தொலைக் காட்சி பேட்டியில் அண்ணன் அசைவம் சாப்பிட்ட ஒரு சம்பவத்தை கூறியிருந்தார்!!
\\திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!\\
\\ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!\\
சினிமாவில் மட்டும், நாமம் போட்டவர்களைப் பார்த்து ஏண்டா இப்படி காலங் காத்தால பட்டை நாமத்துடன் எண் முன்னாடி வந்து நிற்கிற? போற காரியம் விளங்குமா? என்று பல படங்களில் நையாண்டி பண்ணியிருப்பார்.
\\மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!\\ இதை அவர் கொள்கையாவே வச்சிருக்கார். திரைப்பட விழாக்களில் கூட பேசுவதில்லை. [சமீபத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.] It is my nature to write large number of lengthy comments, for all the blogs that I consider interesting. Hope You don't mind. Bye.
கலைவாணர், எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு சமூக விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த மகா கலைஞன், தலைவர் கவுண்டமணி. வாழ்க அவர் புகழ்.
கவுணடமணியின் இடத்தை நிரப்ப தமிழில் இனியாரும் இல்லை..
கவுண்டமணி பற்றி தெரியாத சில விஷயங்களை அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள் நன்றி
இப்போது அலை துகள் கொட்பாட்டை எளிமையான உதாரணத்துடன் விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன் எப்படி பார்த்தாலும் பதிவு மிக பெருசாக இருக்ககூடாது இதுவரை சேர்த்து வைத்த உடன்பிறப்புகலான பாலோவர்ஸ் தெறித்து ஓடிவிட கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறேன்
.....சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் என்றாலும், தவிர்க்கலாமே. நன்றிங்க.
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.
.....தன்னடக்கம். நல்ல விஷயம். இதை நிறைய புது நடிகர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மைதான் சிங்கம்.. இன்னொரு தகவலும் உண்டு தமிழ் சினிமாவில் உலகப்படங்களைப்பற்றி விரல் நுனியில் வைத்திருப்பவர் இவர்தான்! அனைத்து படங்களையும் பார்த்து விடுவாராம்!
Jayadev Das said...
முதல் தடவை வடை எனக்கே!!//////////////////////
வாங்க சார் வாங்க ...................
Jayadev Das said...///////////
பலருக்கும் பயன் தரும் இணைப்பை குடுத்ததற்கு நன்றி .....................
Jayadev Das said...
இன்னைக்கு கவுண்டமணி பற்றிய செய்திகள் போட்டு திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள், நன்றி!! தமிழ் திரையுலகில் எத்தனையோ காமடியன்கள் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள், ஆனாலும் என்னுடைய ஆல் டைம் Favourite கவுண்டமணி அண்ணன்தான்!!...............//////////////////////////////////////////
அவரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா .......................
கக்கு - மாணிக்கம் said...
கவுண்டரை நேசிக்காதவர்கள் யாருமில்லை. அவர் மீடியா வெளிச்சத்தில் அதிகம் வராமல் இருப்பதே அவர் மீது உள்ள மதிப்பை அதிகரிக்கிறது.
இதுதான் அவரை தான் என்ற கர்வம் அற்றவராக காட்டுகிறது.அவருக்கு நிகர் அவரே! வித்யாசமான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
//////////////////////////
ஒரு தயாரிப்பாளர் கவுண்டரிடம் உங்களுக்கு வயசாயிடுச்சி இப்போ மார்கெட் இல்லே அதனால் சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் நிறைய வாய்ப்பு வரும் என்று சொன்னார் .
அதற்க்கு கவுண்டர் சிங்கம் எப்பவும் சிங்கம்தான் வயசானா நாயா மாறிடுமான்னு கேட்டாரு அதான் கவுண்டர் ....
Jayadev Das said...
\\பக்கா சைவம்!\\வடிவேலு ஒரு தொலைக் காட்சி பேட்டியில் அண்ணன் அசைவம் சாப்பிட்ட ஒரு சம்பவத்தை கூறியிருந்தார்!!.................////////////////
ஆமாம் அவர் ஆரம்பத்தில் அசைவமாக இருந்து பின்னர் சைவமாக மாறியவர் உடல்நிலை தான் காரணம் ........
Jayadev Das said...
\\மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!\\ இதை அவர் கொள்கையாவே வச்சிருக்கார். திரைப்பட விழாக்களில் கூட பேசுவதில்லை. [சமீபத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.] It is my nature to write large number of lengthy comments, for all the blogs that I consider interesting. Hope You don't mind. Bye...............////////////////
என்ன சார் இப்படி சொல்லிடீங்க சும்மா படிக்காம டெம்ப்ளட் கமன்ட் போடுபவர்கள் இருக்கும் போது முழுதும் படித்து விட்டு விரிவான பின்னூட்டம் போடுபவர்களை யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க ....................
! சிவகுமார் ! said...
கலைவாணர், எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு சமூக விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த மகா கலைஞன், தலைவர் கவுண்டமணி. வாழ்க அவர் புகழ்..............//////////////////
ஆனா பாருங்க அவருக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சி முதலமைச்சர் எப்படி ஆகுறதுன்னு தெரியல .............
நாமே வேணும்னா வாழைப்பழ முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கலாமா?
# கவிதை வீதி # சௌந்தர் said...
கவுணடமணியின் இடத்தை நிரப்ப தமிழில் இனியாரும் இல்லை..
////////////////////////
காலம் எல்லா பள்ளங்களையும் நிரப்பிவிடும் ..................
ரஹீம் கஸாலி said...
கவுண்டமணி பற்றி தெரியாத சில விஷயங்களை அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள் நன்றி
வருகைக்கு நன்றி நண்பரே ..............
Chitra said...
.....சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் என்றாலும், தவிர்க்கலாமே. நன்றிங்க.......//////////////////
ஆமா அக்கா நானும் முயற்சிக்கிறேன் எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கொஞ்சம் கஷ்டம்தான் இப்போது கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு நினைக்கிறேன் .....
போக போக பிழை இல்லாமல் எழுத முயசிக்கிறேன் .......நன்றி
Chitra said...
.....தன்னடக்கம். நல்ல விஷயம். இதை நிறைய புது நடிகர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.................////////////////
இப்போதைக்கு மிகவும் தேவையான அறிவுரை ரெண்டு படம் ஹிட் ஆனா போதும் இவனுங்க அலப்பறை தாங்க முடியலை ..........
வைகை said...
உண்மைதான் சிங்கம்.. இன்னொரு தகவலும் உண்டு தமிழ் சினிமாவில் உலகப்படங்களைப்பற்றி விரல் நுனியில் வைத்திருப்பவர் இவர்தான்! அனைத்து படங்களையும் பார்த்து விடுவாராம்...............///////////////
உண்மைதான் சத்தியராஜ் ஒரு முறை பேட்டியில் சொன்னார் ..நாங்கள் எல்லாம் வெறும் கட்டவுட்டு மாதிரி எங்களையெல்லாம் பின்னால் இருந்து தாங்கும் சவுக்கு கட்டை தான் கவுண்டமணி ....அவர் பல கதாநாயகர்களை வாழ வைத்தவர் .................
கவுண்டமணியைப்பற்றி பல அறியாத தகவல்களை அள்ளிக்குடுத்த அண்ணன் அஞ்சாசிங்கத்துக்கு ஒரு ஓ போடுங்க. 4 ஓட்டு போடுங்க
யோவ் இத நா எங்கையோ படிச்சிருக்கேன் எங்கிருந்து லவிட்டிட்டு வந்தே சொல்லு
,
கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்கள்...
இன்னுக்கு அவர டிவியில் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்...
நா.மணிவண்ணன் said...
யோவ் இத நா எங்கையோ படிச்சிருக்கேன் எங்கிருந்து லவிட்டிட்டு வந்தே சொல்லு ..........///////////////
அதான் கீழ தெளிவா போட்டிருக்கேன் .....( பாவம் யாரு பெத்த புள்ளையோ )
சங்கவி said...
கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்கள்...
இன்னுக்கு அவர டிவியில் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்...///////////////////////
இன்னும் நூறு வருஷம் ஆனாலும் .............
சி.பி.செந்தில்குமார் said...
கவுண்டமணியைப்பற்றி பல அறியாத தகவல்களை அள்ளிக்குடுத்த அண்ணன் அஞ்சாசிங்கத்துக்கு ஒரு ஓ போடுங்க. 4 ஓட்டு போடுங்க
//////////////////////
சாருக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல் ...............................
பல புதிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ...
தெரியாத பலதகவல்கள்
பகிர்விற்கு நன்றி
"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html
நிறைவான பதிவு, இப்போது இருபவர்களுடன் ஒப்பிட்டால் கவுண்டருடைய குணாதிசயங்கள் வியப்பானவை. கவுண்டருடைய காமெடி, டயலாக்குகளுக்கு இணையே இல்லை, இனி ஒருவர் அப்படிவருவது சந்தேகமே...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிறைவான பதிவு, இப்போது இருபவர்களுடன் ஒப்பிட்டால் கவுண்டருடைய குணாதிசயங்கள் வியப்பானவை. கவுண்டருடைய காமெடி, டயலாக்குகளுக்கு இணையே இல்லை, இனி ஒருவர் அப்படிவருவது சந்தேகமே...!
/////////////////////////////
செவென் செவென் ஜென்மத்துக்கும் ......................
தலைவரைப் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...நீங்கள் சம்மதித்தால் இந்த இடுகையை நான் எனது பேஸ் புக் பக்கத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் பதில் எதிர்பார்த்து
டக்கால்டி said...
தலைவரைப் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...நீங்கள் சம்மதித்தால் இந்த இடுகையை நான் எனது பேஸ் புக் பக்கத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் பதில் எதிர்பார்த்து
////////////////////////////////////////////////////////////
தாராளமாக போட்டுகொள்ளுங்கள் நன்றி .......................
கவுண்டமணி சுத்த சைவம் னு கூட கேள்வி பட்டிருக்கேன்...அவருக்கு சமீபத்தில் முடியாமல் போனபிறகு சிக்கன் மட்டும் சாப்ட சொல்லிருக்காங்க...அதை முதன்முதலில் சாப்பிட்டு விட்டு..ஆஹா...இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டதை விகடனில் படிச்சேன்...:))
தாராளமாக போட்டுகொள்ளுங்கள் //
ஆஹ...நன்றிங்கோவ்...
நிறைவான ப்திவு. வாழ்த்துக்கள்.
கலக்கல் பதிவு,..
பிழைகள்:
//கொட்பாட்டை//
கோட்பாட்டை
//உடன்பிறப்புகலான//
உடன்பிறப்புகளான
//கவனாமாக//
கவனமாக.
பிழை இன்றி எழுதவும் சகோ.
தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அவரின்றி தமிழ் காமடி யை விமர்சிப்பது இயலாத ஒன்று. கவுண்டரின் காமெடி யில் சமூக சிந்தனை நிறையவே இருக்கும்.
//தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அவரின்றி தமிழ் காமடி யை விமர்சிப்பது இயலாத ஒன்று. கவுண்டரின் காமெடி யில் சமூக சிந்தனை நிறையவே இருக்கும். //
எனக்கு தெரிந்து சினிமாக்காரர்களை ஒரு சினிமாக்காரர் சினிமாவில் விமர்சித்தார் என்றால் அது இவராக மட்டும்தான் இருக்கு.
"அந்த சினிம்மாக்கரவுங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சி வெளம்பரம் படுத்துராங்கனா"
THOPPITHOPPI said...
எனக்கு தெரிந்து சினிமாக்காரர்களை ஒரு சினிமாக்காரர் சினிமாவில் விமர்சித்தார் என்றால் அது இவராக மட்டும்தான் இருக்கு.
"அந்த சினிம்மாக்கரவுங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சி வெளம்பரம் படுத்துராங்கனா".//////////////////////////////////////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொப்பி தொப்பி சார் .....................
அவர் ஏன் இப்பொழுது நடிக்கவில்லை...என்ன செய்கிறார் ..என் பதிவில் டாம் அண்ட் ஜெர்ரி கவுண்டமணி செந்தில் காமெடி பாருங்கள்
Post a Comment