இப்போ நான் எழுத போறது ஒரு உண்மை சம்பவம் ரொம்ப பயபடுறவங்க இப்பவே கெளம்பலாம் .
தைரியசாலிகள் என்னை பின் தொடர்ந்து வரலாம் .
தைரியசாலிகள் என்னை பின் தொடர்ந்து வரலாம் .
18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர்கள் துணையுடன் படிக்கவும் ..
என் கல்லூரி நண்பன் ஒருவன் அவன் சித்தப்பாவை பார்க்க அவர்கள் கிராமத்திற்கு போயிருந்தான் அந்த ஊர் பெயர் நரிக்குடி .
இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்தாச்சி தைரியமா போய் பார்த்திடலாம் என்று வயசுக்கேற்ற துணிச்சல் அவனை முன் செல்ல வைத்தது.
இந்த ஊரில் பேய் நடமாட்டம் அதிகம் என்று அவன் சித்தப்பா ஏற்கனவே சொல்லியது அப்போது நினைவிற்கு வந்தது .
பயபுள்ள என்னை மாதிரி தைரியசாலி வேற அதனால முன்வச்ச கால பின்வாங்காம மனசுல முருகன் பாட்டு பாடிகிட்டு நடைய போட்டான் .
பாதி தூரம் கடந்தாச்சி தெரு விளக்கு வேற இல்ல அம்மாவாசை இருட்டு வேற இப்போ கூட மனசு திரும்பிடலாம்ன்னு சொல்லுது ஆனா மனசு சொல்ற பேச்சை யாரு கேட்டா . நானெலாம் அப்பா சொல்ற பேச்சையே கேட்கமாட்டோம் .
அப்போ கொஞ்ச தூரத்துல ஒரு வெளிச்சம் லாந்தர் விளக்கு மாதிரி அப்பாட என்று மனசு நிம்மதி ஆய்டுச்சி .
வெளிச்சம் கிட்ட நெருங்க நெருங்க மீண்டும் பயம் அங்கே ஒரு வயதான பெரியவர் முகம் தீயில் பாதி கருகிய நிலையில்
கையில் லாந்தர் விளக்குடன் என் நண்பனையே முறைத்து பார்த்தபடி உட்கார்திருந்தார் .
மேற்கொண்டு முன்னாள் போவதா இல்லை புறமுதுகிட்டு ஓடிவிடுவதா என்று ஒரு கணம் யோசித்தபடி அங்கேயே நின்று விட்டான் .
பிறகு மனதில் எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு துணைக்கு அஞ்சா சிங்கத்தையும் நினைத்து கொண்டு முன்னாள் நடக்க ஆரம்பித்தான் .
அவரை தாண்டிதான் இவன் நடந்து செல்ல வேண்டும் . கொஞ்சம் தைரியத்தை வரவைத்து கொண்டு என்ன பெரியவரே இந்த ராத்திரியில இங்க என்ன பண்றீங்க என்று அதட்டலாக கேட்டான் .
அவர் பின்னால் இருந்த பையை எடுத்து அவன் முன்னாள் வைத்தார் அதில் நிறைய புத்தகங்கள் இருந்தது தம்பி நான் புத்தகம் விக்கிறேன் ஒன்று வாங்கீட்டு போ என்று சொன்னார் .
அந்த குரலை கேட்டவுடன் இவன் உடம்பு பயத்தில் சில்லிட்டுவிட்டது . செவுற்றை நகத்தால் சுரண்டும்போது ஒரு சிலிர்ப்பு சிலிர்க்குமே அது மாதிரி எனக்கு வேண்டாம் என்று சொல்லிபார்தான் . தம்பி ஒன்னு வாங்கிக்க நீ வாங்கினாதான் நான் போவேன்.
என்றார் .
மீண்டும் அந்த குரலை கேட்க பயந்து சரி குடுங்க நான் பார்த்து வாங்கிக்கிறேன் என்று கேட்டான்.
அவர் புத்தக பையை இவனிடம் தந்தார். அதில் இருப்பதிலேயே கனமான புத்தகம் ஒன்றை எடுத்து இது எவ்ளவு என்று கேட்டான் .
அப்போது அவன் தோளின் மேல் ஒரு கை விழுந்தது .
அசையாமல் விறைத்து நின்று விட்டான் . பின்னால் இருந்து அதே குரல் தம்பி கடைசி பக்கத்தை மட்டும் படிக்காதே என்று.
சரி என்று தலை ஆட்டிவிட்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான் .
இல்ல வரும்போது கேள்விபட்டேன் ஊர் காரங்க சொன்னாங்க என்று தான் பயந்த கதையை சொல்ல வெட்கப்பட்டு சமாளித்திருக்கிறான் .
எல்லாரும் தூங்கிய பிறகு இவன் மட்டு தான் வாங்கிய புத்தகத்தை எடுத்து பார்த்தான் அதில் காந்தி தாத்தா அட்டையில் சிரித்து கொண்டிருந்தார்.
கடைசி பக்கத்தை பார்க்க கூடாதென்று அந்த கிழவர் கூறியது நினைவிற்கு வந்தது.
ஏதை கூடாது என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் செய்ய தோன்றும் அதற்க்கு இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
புத்தகத்தை பிரித்தவுடன் கடைசி பக்கத்தை பார்த்தான் .
அங்கே .........
22 கருத்து சொல்றாங்க:
விறுவிறுப்பான எழுத்து நடை .... கடைசி வரிகள் மிக அருமை.... பாராட்டுக்கள் (கதைதானே?)
சி. கருணாகரசு said...
விறுவிறுப்பான எழுத்து நடை .... கடைசி வரிகள் மிக அருமை.... பாராட்டுக்கள் (கதைதானே?)////
சத்தியமா கதை தான் .........
இது கதையா கமெடியா?
யோவ் யார ஏமாத்துறீங்க அந்த புக்கு ஒன்னும் கனமாலாம் இருக்காது .
நா.மணிவண்ணன் said...
யோவ் யார ஏமாத்துறீங்க அந்த புக்கு ஒன்னும் கனமாலாம் இருக்காது .//////////////////
கதைகேல்லாம் இவ்ளோ லாஜிக் பார்க்ககூடாது ................
Speed Master said...
இது கதையா கமெடியா?/////////////
ஏன் காமடி கதையா இருக்ககூடாதா.................
Super Boss! :-)
ஜீ... said...
Super Boss! :-)
நன்றி.........நன்றி.........நன்றி.........
ஹா, ஹா, நல்லாவே ஏமாந்திருக்கீங்க.
Lakshmi said...
ஹா, ஹா, நல்லாவே ஏமாந்திருக்கீங்க.///////////
ஏமாந்தது நான் இல்ல என் நண்பன் ............
56 சிங்கம்
அருமை வாழ்த்துகள்.
THOPPITHOPPI said...
56 சிங்கம்...............///
வருகைக்கு நன்றி .........
venkat said...
அருமை வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றி .........
அந்த படம் - மிரட்டுது!
பதிவு நல்லா இருக்குது
Chitra said...
அந்த படம் - மிரட்டுது!
பதிவு நல்லா இருக்குது...........///////
நன்றி ..............
என்னபா இது இப்படி படமெல்லாம் போட்டு பயமுறுத்திறீங்க ஆனால் நல்லாருக்கு....
மாணவன் said...
என்னபா இது இப்படி படமெல்லாம் போட்டு பயமுறுத்திறீங்க ஆனால் நல்லாருக்கு....//
நன்றி.........
நல்ல கதை.......... பரபரப்பு, திகில், லாஜிக் எல்லாமே இருக்கு.........!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல கதை.......... பரபரப்பு, திகில், லாஜிக் எல்லாமே இருக்கு.........!///////
நன்றி ஐயா நன்றி ..............
இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...
நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
அருமை
Post a Comment