இந்த பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல உண்மையில் நடந்தது.
சில வருடங்களுக்கு முன்னால் நான் என் கல்லூரி நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ள காட்டுக்கு அட்வென்ச்சர் டூர் சென்றேன்.
ஸ்ரீவள்ளிபுத்தூர் அருகே இடம் சரியாக தெரியவில்லை .
அடர்ந்த காடு நிறைய வனவிலங்குகள் காட்டு அருவி .
கூட்டம் கூட்டமாக யானைகள்.எங்கு போவதென்றாலும் நடந்து தான் செல்லவேண்டும்.
பாதை கிடையாது எங்களுக்கு வழி காட்ட பழங்குடி சிறுவன் ஒருவன் வந்திருந்தான்.
அவன் செருப்பு எனக்கு விநோதமாக தெரிந்தது.
லாரி டயரை வெட்டி செருப்பு போல் தைத்திருந்தான்.
எனக்கு அதை மாட்டி பார்க்க ஆசை.என் ஷூவை குடுத்து அவன் செருப்பை வாங்கி மாட்டிக்கொண்டேன்.
நடக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. இருந்தாலும் மனது உற்சாகமாக இருக்கும் போது சிரமம் பெரிதாக தெரியாது.
ஒரு மலை உச்சியில் இருக்கும் போது இது தான் யானை வழுக்கி பாறை என்று சொன்னான்.
ஆர்வகோளாறு காரணமாக அதன் முனை வரை போய் எட்டிப்பார்த்தேன்.
அதன் பிறகு நான் அனுபவித்த அந்த ஆறு வினாடிகள் பற்றி தான் உங்களோடு பகிர்கிறேன்.
பாறை முனையில் பாசி படிந்து இருந்ததால் கால் வழுக்கி விட்டது.
அது மிகவும் செங்குத்தான மலை. வினாடியில் எல்லாம் மாறி விட்டது கீழ் நோக்கி வேகமாக விழுந்து கொண்டிருந்தேன்.

மரணத்தை மிக அருகில் சந்தித்தவன் நான். மரண பயம் என்று சொல்கிறார்களே அது மரணத்தை நெருங்கி பார்க்கும் பொது வருவதா? அல்லது தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று மூளை சிந்திக்கும் போது வருவதா?
நான் விழும் போது முதலில் காலம் என்னை விட்டு விலகியதை உணர்ந்தேன்.
ஏனென்றால் அதிகபட்சம் ஆறு வினாடிகள் இருக்கலாம் ஆனால் ரொம்பநேரம் அந்தரத்தில் பயணம் செய்த உணர்வு இருந்தது.
பயம் என்ற உணர்ச்சி அப்போது வரவில்லை. மனது மிக லேசாகவும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தேன். எந்த வித பதட்டமோ சிந்தனையோ வரவில்லை.
நடுவில் ஒரு புதரில் சிக்கி கொண்டு அதை கெட்டியாக பிடித்து கொண்டேன்.
அந்த வினாடியில் என் நிலைமை புரிய ஆரம்பித்தது.
இன்னும் கெட்டியாக அந்த புதரை பிடித்து கொண்டேன். பயம் நடுக்கத்தில் என் இதயதுடிப்பை நான் கேட்க முடிந்தது.
மீண்டும் காலம் வேகமாக நகர்வதாக உணர்ந்தேன்.
பயத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு அந்த பழம்குடி மக்கள் என்னை லேசான சிராய்ப்புகளுடன் காப்பாற்றி விட்டார்கள்.
என் கேள்வி என்னவென்றால் மரணம் உண்மையில் பயங்கரமானதா?
எனக்கு அப்படி தெரியவில்லை ஆபத்தில் இருக்கும் போது நம் உடலில் estrogen அளவு அதிகம் சுரந்து பயம் இல்லாத வலி இல்லாத ஒரு வித பரவச உணர்வுடன் வைத்திருக்கிறது.
இயற்கைக்கு என்ன ஒரு கருணை.
உங்கள்ளில் யாருக்காவது இந்த மாதிரி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஆவலுடன் இருக்கிறேன்.
4 கருத்து சொல்றாங்க:
Very Interesting...
சங்கவி said...
Very Interesting...////
நன்றி...................
//எனக்கு அப்படி தெரியவில்லை ஆபத்தில் இருக்கும் போது நம் உடலில் estrogen அளவு அதிகம் சுரந்து பயம் இல்லாத வலி இல்லாத ஒரு வித பரவச உணர்வுடன் வைத்திருக்கிறது.//
உண்மை தான் என்றே நினைக்கிறேன். மரண பயம் என்பது உறவுகளை பிரிவது மட்டுமே
கோவி.கண்ணன் said...
//எனக்கு அப்படி தெரியவில்லை ஆபத்தில் இருக்கும் போது நம் உடலில் estrogen அளவு அதிகம் சுரந்து பயம் இல்லாத வலி இல்லாத ஒரு வித பரவச உணர்வுடன் வைத்திருக்கிறது.//
உண்மை தான் என்றே நினைக்கிறேன். மரண பயம் என்பது உறவுகளை பிரிவது மட்டுமே....
முதல் முறையாக என் தளத்திற்கு வந்ததற்கு நன்றி..........
Post a Comment