Monday, October 21, 2013

குறும்பட குஸ்கா

v

மிக சமீபகாலமாக நிறைய பேர்களுக்கு குறும்படம் எடுக்கும் ஆசை தலைவிரித்து ஆடிகொண்டிருக்கிறது  (என்னையும் சேர்த்துதான்).
அதற்க்கு தேவையான பொருள்கள் என்னவென்றால். ஒரு டிஜிட்டல் கேமரா,சுமார்மூஞ்சி குமார் மாதிரி நான்கு நண்பர்கள்,கொஞ்சம் பணம் அவ்ளோதான். இப்படிதான் நிறைய பேர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

சரி நான் விஷயத்திற்கு வருகிறேன் நேற்று நண்பர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் நண்பர்  நிஷான்னின் குறும்பட வெளியீட்டிற்கு நான் ஆரூர்மூனா செந்தில் ,மற்றும் சில நண்பர்களுடன் ஏ.வி.எம்.ப்ரிவிவ் தியேட்டருக்கு சென்றிருந்தோம்.

படத்தின் பெயர் ஓட்டம் நண்பர் நிஷான் இயக்கி இருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு விமர்சனம் எல்லாம் தேவையா .? இது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைத்தேன் என்றாலும் குறும்படங்களை பற்றிய என்னுடைய புரிதலை பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்.

குறும்படத்திற்கு கதை என்கிற வஸ்த்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒரு சிறு சம்பவத்தை எப்படி சுவாரசியமாக சொல்கிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. காட்சிபடுத்துவதில் உள்ள வித்தியாசம் உங்களை கவனிக்க வைக்க வேண்டும் . பெரும்பாலும் குறும்படம் எடுப்பவர்கள். அதை தனது விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி சினிமாவிற்க்காண தங்கள் முயற்சியை எடுப்பார்கள். அப்படி என்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் சொல்ல வந்ததை தெளிவாகவும் சுவாரசியமாகவும் சொல்ல வேண்டும். கொஞ்சம் சொதப்பினாலும் படம் பார்ப்பவர்கள் "சரி அதுக்கு என்ன இப்போ" என்கிற மாதிரி முகத்தை திருப்பி கொள்வார்கள்.

ஓட்டம் படத்தில் புதுமையாக எந்த கதாபாத்திரமும் சித்தரிக்க படவில்லை.
நாலு நண்பர்கள் அதே டாஸ்மாக். தேவை இல்லாமல் ஒரு லவ்வு . சரி என்னதான் செய்யபோகிறார்கள் என்கிற எதிபார்ப்பு படம் முடியும் வரை யாருக்கும் வரவில்லை. ஒரு முழுநீள திரை படத்தில் லாஜிக் பிழைகள் வரலாம் அது கூட ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம். ஆனால் வெறும் பதினைந்து நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தில் இத்தகைய லாஜிக் பிழைகள் ஏற்று கொள்ள முடியாதது .

சரி பாத்திரபடைப்பிலாவது ஏதாவது புதுமையாக சிந்தித்து இருக்கலாம். 90களில். வந்த  உதயம், சத்யா, போன்ற படங்களில் வந்த அதேபோன்ற வில்லன். போலிஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரம் வருகிறது அது அபத்தத்தின் உச்சம். அவர் சிவாஜியை மனதில் வைத்து கொண்டே நடித்திருப்பார் போலும். குறும்பட நடிப்பு என்பது எதார்த்தர்க்கு  மிக நெருக்கமாக இருக்க வேண்டும். ஒரு டோஸ் அதிகம் ஆனாலும் பார்க்க சகிக்காது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால் தேவையற்ற காட்சிகள் அறவே இருக்க கூடாது.

அடுத்ததாக வசனம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு பவர்புல்லாக அந்த காட்சி இருக்கும். வழ வழ வசனங்கள் நிச்சியம் படத்திற்கு  மைனஸ்தான். நகைச்சுவையை காட்சியாக சித்தரிப்பது என்பது வேறு. அதை சொல்வது என்பது வேறு. நகைச்சுவையை காட்சியாக சித்தரிக்கும் போது அதில் இயக்குனரின் திறமை மட்டுமே முக்கியம். வசனத்தின் மூலம் அதை காட்சி படுத்தினால் அதில் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறும்படங்களுக்கு வசனம் குறைவு என்பதால் முடிந்த வரை குறியீடாகவே அதை பயன்படுத்துவார்கள். கதாபாத்திரங்கள் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவுவது நமக்கு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ஓட்டம் பீஸ் இல்லாத பிரியாணி. 

நண்பருக்கு நல்ல படம் எடுக்கும் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. இது அவரது முதல் படம் என்பதால் பிழைகளை அதிகம் சுட்டிக்காட்ட மனம் வரவில்லை.  தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்தமுறை தவறுகள் இல்லாத சிறந்த படம் எடுப்பார் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

படத்தின் டீசரை இங்கே பார்க்கவும் .





       
     

            

14 கருத்து சொல்றாங்க:

aavee said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி குறும்படம் எடுக்கும் போது பிழைகளை சுட்டிக் காட்டாமல் எப்படி சுட்டிக் காட்டுவது என்று ஒரு குறும்படம் எடுக்கலாமே... ஹிஹி... உங்களின் புரிதலுக்கு பாராட்டுக்கள்...

பீஸ் இல்லாத பிரியாணி - இந்த விமர்சனம் போதாதா...?

அஞ்சா சிங்கம் said...

கோவை ஆவி said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!/////

நம்ம யாரு நக்கீரன் கூட சேர்ந்து சரக்கடிச்ச பயலுகலாச்சே ..

அஞ்சா சிங்கம் said...

@திண்டுக்கல் தனபாலன்
//
தலைவரே நாம எடுக்குறோம். ஆஸ்காரில் இருந்து அம்பாசிடர் வரைக்கும். புக்கரில் இருந்து புளியோதரை வரைக்கு எதையும் விடாமல் அள்ளுறோம் வெயட் அண்ட் சி

ராஜி said...

புளியோதரையை நீங்க வச்சுக்கிட்டு அம்பாசிடர் மட்டும் அக்கா வூட்டுக்கு தீபாவளி சீரா பார்சல் பண்ணிடுங்க தம்பி!

அஞ்சா சிங்கம் said...

அக்கா தலை தீவாளிக்குதான் சீர் செய்வாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். உங்களுக்கு பத்து தலை இருந்தால்கூட இந்த தீபாவளி அதையும் தாண்டி இருக்குமே.

Manimaran said...

குறும்படத்தைப் பற்றி இவ்வளவு அழுத்தமான தெளிவானப் புரிதல் இருக்கும்போது தாராளமாக குறும்படம் எடுக்கலாம்...!

pichaikaaran said...

இன்டரஸ்டிங்க்... குறும்படங்கள் குறித்து எழுதுவது வரவேற்கத்தக்கது

Anonymous said...

இப்போது நம் தமிழ் சினிமாவில் வருகிற 2 மணி நேர குஸ்காவுக்கு இந்த 15 நிமிட குஸ்கா எவ்ளோ மேல்.

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

//குறும்படத்திற்கு கதை என்கிற வஸ்த்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. //

என்ன அதிகமா "கலைவாசனை நுகர்வு' செய்றீர் போல ,குறும்ப்படம் விமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்ட்டீர் பலே.

மேற் சொன்ன கதை தேவையில்லை, கருத்து தேவையில்லை என்பது நம்ம ஊர் குறும்பட உற்பத்தியாளர்களின் இலக்கணம்.

உண்மையில் உலகத்தரமான குறும்படங்களில் எல்லாம் ஒரு கதையோ,கருத்தோ கண்டிப்பாக இருக்கும்,ஆனால் அது பிரச்சாரம் போல துறுத்திக்கொண்டு தெரியாது, சொல்லப்பட்ட மெசேஜ் ஐ நாம யோசித்து தான் தெரிந்துக்கொள்ள முடியும்.

பிரச்சார நோக்கில் எடுக்கப்பட்ட குறும்படங்களில் கூட தொண்டைக்கிழிய பிரீச்சிங் செய்ய மாட்டார்கள், அதெல்லாம் நம்மாட்களுக்கு பிடிபட நாளாகும்!

ஹைக்கூ போல அமைத்து இருப்பார்கள்.

ஹைக்கூ என்றப்பெயரில் கவிதை கொலை செய்வது போல தான் நம்மாட்க்கள் குறும்பட கொலை செய்துட்டு இருக்காங்க அவ்வ்!

ஒரு குறும்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எஷ்டாப்ளிஷ்மெண்ட் காட்சி வைத்து நீட்டித்தால் முழு நீள திரைப்படமாகும் வகையில் இருந்தால் (சொல்லப்படாத கதை இருக்க வேண்டும்) நல்லா வரும்.

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால்
///////////
தலைவா நீங்க சொல்வதெல்லாம் உண்மை ....
ஆனால் நண்பர்களின் முயற்சியை அதிகமாக குதற கூடாது என்கிற நல்லெண்ணம் .
//நீர் சொன்ன அந்த கருமத்தை தான் நான் மறைமுகமாக சொல்ல முயற்சித்தேன் எனக்கு அசின் போட்டோ கிடைக்க வில்லை போதுமா ..

சீனு said...

எப்படியாவது ஒரு டைரக்டர் சான்ஸ் வாங்கிவிட வேண்டும் என்ற வெறியையே பலரது குறும்படங்களிலும் பார்க்க முடிகிறது, இது ஆரோக்கியமான சூழல் என்றாலும் சிலது படு மொக்கையாக சொதப்பி விடுகிறது

MANO நாஞ்சில் மனோ said...

இது அவரது முதல் படம் என்பதால் பிழைகளை அதிகம் சுட்டிக்காட்ட மனம் வரவில்லை.//

நல்ல மனசுய்யா...

குறும்படம் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி, நண்பர் ஜெயிக்க வாழ்த்துக்கள்...!

மணவை said...

அன்புள்ள நண்பருக்க,

‘ஓட்டம்’ குறும்படம் பற்றி தெரிவித்த கருத்து நன்றாக இருந்தது. நாசுக்காகவும் இடித்துரைத்திருந்தீர்கள்.

தங்களின் விமர்சனம் அருமை.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in










Popular Posts