Monday, January 14, 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா

v



ஏற்கனவே அலக்ஸ் பாண்டியன் படம் பார்த்து அக்குளில் கட்டி வந்தவன் போல் சூடாகி போயி இருந்த என்னை பிலாசபி லட்டு திங்க அழைத்தார் .
இந்த ஆளு எப்போவும் இப்படிதான் சனிகிழமை இரவு போன் போட்டு நம்மகிட்ட சம்மதம் வாங்கிடுவாரு .(சைக்காலஜி தெரிஞ்ச பிலாசபி )
சரி பார்ப்போம் இதிலாவது லட்டு தராங்களா? இல்லை புட்டு தராங்களா ?அட்லீஸ்ட் பொறி உருண்டை அளவிற்கு திருப்தி கிடைத்தால் கூட பொதும்  என்ற மனநிலையில் கிளம்பினேன் .
சரியாக காலை 9.00 மணிக்கு ஐ ட்ரீம்ஸ் திரை அரங்கம் வந்து சேர்ந்தேன்.தியேட்டர் வாசலில் எங்கு பார்த்தாலும் அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர்கள் கட் அவுட்கள் என்று  வியாபித்து இருக்க பயபுள்ள திட்டம் போட்டு நம்மளை கவுத்திடுச்சி என்று நினைத்து கொண்டு பின் வாங்க தயாரானேன் .
ஜீ அது மூன்று காட்சி நம்ம படம்தான் பகல் காட்சி என்று சமாதான படுத்தி  மேலே சிறிதாக ஒட்டி இருந்த போஸ்டரை காட்டினார் அதன் பிறகுதான் உயிர் வந்தது .

படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான் அதை சொல்லிய விதத்திலும் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை .என்றாலும் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறார்கள்.
பவர் ஸ்டாரை வைத்து பெரிய அறுவடை செய்திருக்கிறார்கள் .இந்த ஆளுக்கு நடிக்கவே தெரியவில்லை ,பாடி லேங்குவேஜ் சரி இல்லை டயலாக் டெலிவரி படு மோசம் , லிப் மூமன்ட் சுத்தமா இல்லை , சரி இருக்கட்டும் அதனால் என்ன இதெல்லாம் சாதா ஸ்டாருக்கு தான் வேண்டும் எங்க பவருக்கு இது எதுவும் தேவை இல்லை .நீங்க வந்தா மட்டும் போதும் .நீங்க வந்தா மட்டும் போதும் என்று கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள் .
தியேட்டரில் இதே போன்றதொரு ஆர்ப்பரிப்பை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரஜினி படத்திற்குதான் போக வேண்டும் .

அடுத்து  சந்தானம் மனிதர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்த படத்தில் இவர்பங்கு மிக அதிகம் இந்த படத்திலும் ரெட்டை அர்த்த வசனம் பேச தவறவில்லை . ஆனால் அது அதிகம் இல்லாதது ஆறுதல்.

அடுத்து சேது இந்த படத்திற்கு கதாநாயகன் வேண்டுமே என்பதற்காக இவரை வைத்திருக்கிறார்கள்.(மிக்ஸ்சர் சாப்பிடதான்) பெரிதாக இவருக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு எதுவும் இந்த படத்தில் இல்லை நாயகி இவர் காதலை ஏற்று கொண்டதால் இவர் கதாநாயகன் ஆகி விடுகிறார். பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் என்கின்ற ரெண்டு லைட் ஹவுஸ்க்கு நடுவே இவர் வெறும் பெட்டர்மாஸ் லைட் ஆகி விடுகிறார்.


நாயகி விஷாகா  நல்லாத்தான் இருக்கிறார் பஞ்சாப் கோதுமை ஆச்சே பின்ன எப்படி இருக்கும் . பொதுவாக கமெடி படங்களில் பெண்களுக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும் . சதிலீலாவதி போல். இதில் இவருக்கு அந்த மாதிரி கிடைக்காதது வருத்தம் தான் . ஆனாலும் ஒரு பாடலில் தனது எல்லா திறமையும் காட்டு காட்டு என்று காட்டி விடுகிறார். அதனால் இவரை ஏற்று கொள்ளலாம்.

அடுத்ததுதான் முக்கியமான பாயிண்ட் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரும் இவருடைய உழைப்பை மறந்து விட்டார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நம்ம யங் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கின்ற எஸ்.டி .ஆர் . படம் நல்லா விருவிருப்பா போயிகிட்டு இருக்கும் போது  கவுரவ வேடத்தில் இவர் வருகிறார் . நமக்கு அடிவயிறு பகீர் என்கிறது .
நல்ல வேலையாக எந்த பைட்டும் செய்யாமல், பாட்டு பாடாமல், ரெண்டே ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் .
படமும் பிழைத்து கொண்டது .


பழைய படத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்தல் . இந்த படம் அதன் அருகில் கூட வரமுடியாது .அதுதான் பாக்கியராஜின் வெற்றி .
லட்டு சிறுசாக இருந்தாலும் சுவையாகவே இருக்கிறது ...


13 கருத்து சொல்றாங்க:

காப்பிகாரன் said...

தல நான் மறக்காம நம்ம str பத்தி சொல்லி இருக்கேன்

காப்பிகாரன் said...

http://chakkarakatti.blogspot.in/

அஞ்சா சிங்கம் said...


காப்பிகாரன் said...

தல நான் மறக்காம நம்ம str பத்தி சொல்லி இருக்கேன்
///////////////////////////////////////
இப்போதான் பார்த்தேன் அவர் தியாகத்தை மறைக்க கூடாது இல்லையா ..?

Robert said...

நீங்க வந்தா மட்டும் போதும் என்று கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள் // ஆமாமா அவரு ஸ்க்ரீன்ல வந்தாலே ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. நல்லவேளை வந்து கொஞ்ச நேரத்துலேயே ரொம்ப இம்சை பண்ணாம போயிரார் நம்ம சிம்பு.. அதுதான் லட்டோட சிறப்பே....

ராஜ் said...

படம் எனக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது...அதிகமாம் என்னை யோசிக்கவே விட வில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சரி இருக்கட்டும் அதனால் என்ன இதெல்லாம் சாதா ஸ்டாருக்கு தான் வேண்டும் எங்க பவருக்கு இது எதுவும் தேவை இல்லை .நீங்க வந்தா மட்டும் போதும் .நீங்க வந்தா மட்டும் போதும் என்று கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள் .//////

ரைட்டு... இனி ஸ்ட்ரெய்ட்டா கோட்டைதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனாலும் ஒரு பாடலில் தனது எல்லா திறமையும் காட்டு காட்டு என்று காட்டி விடுகிறார்.////

அது என்ன பாட்டுன்னு சொல்லிட்டா நாங்க அப்படியே பாத்துப்புட்டு போய்டுவோம்ல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// படம் நல்லா விருவிருப்பா போயிகிட்டு இருக்கும் போது கவுரவ வேடத்தில் இவர் வருகிறார் . நமக்கு அடிவயிறு பகீர் என்கிறது .
நல்ல வேலையாக எந்த பைட்டும் செய்யாமல், பாட்டு பாடாமல், ரெண்டே ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் ////////

இனிமே சொம்பு அவர் படத்துலயேம் இதே டெக்குனிக்க ஃபாலோ பண்ணா படம் சூப்பர் ஹிட்டாக வாய்ப்பு இருக்கு.....

rajamelaiyur said...

எங்கள் தல பற்றி எழுதியமைக்கு நன்றி
இப்படிக்கு

பவர் ஸ்டார் ரசிகர் மன்றம்
பால் வீதி ,
பூமீ
மற்றும்
ஒருங்கிணைந்த ஒன்பது கிரகங்கள் .

rajamelaiyur said...

இன்று

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதி download செய்ய வேண்டுமா ?

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

ஹி..ஹி லட்டு பெருசா தான்யா இருக்கு,ஆமாம் நீர் எதை சொன்னீர்?


//அடுத்து சேது இந்த படத்திற்கு கதாநாயகன் வேண்டுமே என்பதற்காக இவரை வைத்திருக்கிறார்கள்.(மிக்ஸ்சர் சாப்பிடதான்) //

லட்டு தின்னவன் ஒருத்தன்(ரெண்டு?),அதை வேடிக்கை பார்த்தவன் ஒருத்தன் அவனுக்கு பேரு படத்துல ஹீரோ :-))

கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசயானு அடுத்த பாகம் வருமா?

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... இந்தமுறை ஹீரோயினை பத்தி எழுதி பாவ விமோச்சனம் தேடிக்கிட்டாச்சு... இப்ப தான் ஞாபகம் வருது ஒப்பனிங் சாங்கில் வரும் ஐட்டம் நடிகையை பற்றி யாருமே எழுதவில்லை...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல வேலையாக எந்த பைட்டும் செய்யாமல், பாட்டு பாடாமல், ரெண்டே ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் .
படமும் பிழைத்து கொண்டது .//

நாமும் பிழைத்து கொண்டோம் இல்லையா...

Popular Posts