இந்த வார்த்தைக்கு தமிழில் மட்டுமே சிறப்பான அர்த்தம் உள்ளதாக நான் கருதுகிறேன் .
இந்த உலகில் பல கால கட்டத்தில் பல வித தத்துவங்கள் மதமாக பரினவித்து உள்ளன .
அவற்றில் பல மதங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது .எப்படி ஒவ்வொரு உயிருக்கும் தோற்றம் ,மறைவு இருக்கிறதோ . ஒவ்வொரு சாம்ராஜ்யத்துக்கும் தோற்றம் மறைவு இருக்கிறதோ . அதேபோல ஒவ்வொரு மதத்திற்கும் தோற்றம் மறைவு கண்டிப்பாக உண்டு . இப்படி அழிந்து போன மதங்கள் ஒரு கால கட்டத்தில் மிகவும் செல்வாக்கான உச்ச நிலையில் இருந்தவைதான் என்பதை நாம் மறக்க கூடாது .
இவ்வாறு அழிந்த அல்லது அழியும் நிலையில் இருக்கும் மதங்களை பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன் . உங்கள் ஆதரவை பொருத்து ...
சொராஸ்ட்ரியம்:-
(zoroastrianism ):-
இந்த மதம் சொராஸ்டார் என்பவரால் தோற்றுவிக்க பட்டது .இவரை பற்றி தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கிறது . இன்றைய வடக்கு ஈரானின் ஒரு பகுதியில் கி.மு. 628 இவர் பிறந்திருக்கலாம் என்று அறிய படுகிறது . இவரது இளமை காலம் பற்றி எந்த தகவலும் இல்லை . எந்த சமயத்தில் இவர் இறை அருள் பெற்றார் என்றும் தெரிய வில்லை ஆனால் தனது 40 ஆம் வயதில் வடகிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரை தன் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார் . அந்த மன்னரே பிற்காலத்தில் இவரின் நண்பராகவும் பாதுகாவலனாகவும் இருந்தார். இவர் 77 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் .கி.மு. 551 ஆண்டு வாக்கில் இவர் இறந்திருக்கலாம் ..
இறைமையியல் :-
அத்வைதமும் துவைதமும் இணைந்த ஒரு கலவைதான் இந்தமதம் . இவர் கருத்து படி ஒருவனே தேவன் . அவர் பெயர் "அஹூரா மாஜ்டா " அதன் அர்த்தம் மெய் அறிவு பெருமான் . அதே போல் இந்த உலகில் தீய சக்தி இருக்கிறது அதன் பெயர் "அங்ரா மைன்யு " இது தீமையும் பொய்மையும் ஊக்குவிக்கும் ..
இந்த இரு சக்திகளின் போராட்ட களம் தான் இந்த பூமி . இதில் நன்மையை ஆதரிப்பதா ,.? அல்லது தீமையை ஆதரிப்பதா .?என்பதை ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள் . தற்போது இது நெருங்கிய போராட்டமாக இருந்தாலும் நீண்ட கால போக்கில் நன்மையே வெல்லும் என்பது சொராஸ்டார்களின் நம்பிக்கை .
துறவு வாழ்வை இந்த சமயம் கடுமையாக எதிர்க்கிறது மிகவும் விசித்திரமான சமய சடங்குகள் இவர்களிடம் உண்டு .
நெருப்பை புனிதமாக கருதுவார்கள் . இவர்கள் கோவிலில் ஒரு அணையா தீபம் ஒன்று இருக்கும் .
இவர்கள் இறந்தவர்கள் உடலை அப்புற படுத்தும் முறை மிக விசித்திர மானது . அதை எரிக்கவோ புதைக்கவோ கூடாது . மலை உச்சிகளில் கழுகுக்கு இரையாக வைத்து விடுவார்கள் .
மதம் பரவுதல் :-
இவர் வாழ்ந்த காலத்திலே ஓரளவு வெற்றி பெற்ற மதமாக இருந்தாலும் .கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மகா சைரஸ் என்ற மாவீரன் பாரசீகத்தோடு இரானை இணைத்துகொண்டான் .அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தை தழுவினார்கள் . இந்த சமயத்திற்கு ஆதரவு பெரிய அளவில் பெருகியது .
மதத்தின் வீழ்ச்சி :-
கி.மு.4 காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் படையெடுப்பினால் இந்த மதம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது . எனினும் மீண்டும் பாரசீகர்கள் அரசியல் சுதந்திரம் பெற்றதும் மீண்டும் இது புத்துயிர் பெற்றது .
சாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் (கி.பி.226 -651 ) இது அரச சமயமாக ஏற்று கொள்ளப்பட்டது ...
என்றாலும் இதற்க்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றிய பின்புதான் ஏற்பட்டது .மிக கடுமையான முறையில் இவர்கள் மதம் மாற்ற பட்டார்கள் .
பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் . எஞ்சி இருந்தவர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இரானில் இருந்து தப்பி ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தார்கள் . பிறகு அவர்களின் சந்ததிகள் இந்தியா சென்று அங்கு அவர்களுக்கு ஒரு சிறு குடியிருப்பை ஏற்படுத்தி கொண்டார்கள் . பாரசீகத்தில் இருந்து வந்ததால் இவர்கள் பார்சி என்று அழைக்க படுகிறார்கள் ..ஏறதாள 1 ,50000 லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் இது மிக சிறு தொகை என்றாலும் இந்த மதம் முழுவதுமாக அழியவில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி . ஒரு காலத்தில் மிக அதிகமான செல்வாக்கோடு இருந்த சமயம் இது அதே நேரம் உலகின் தொன்மையான மதங்களில் ஒன்று . இதன் இறைமையியல் செல்வாக்கு .யுத மதத்திலும் கிறித்துவ மதத்திலும் மற்றும் இதற்க்கு பின்னர் தோன்றிய மானி மதத்திலும் மிக பெரிய செல்வாக்கை செலுத்துகிறது ..
குறிப்பு :-அடுத்த பகுதியில் மானி மதத்தை பற்றி எழுதுகிறேன் .
40 கருத்து சொல்றாங்க:
உங்களுக்கு விருப்பம் இருந்தால் மதங்களை பற்றிய கீழ்க்கண்ட பதிவுகளை படித்து பாருங்க
http://www.valaiyugam.com/2012/03/blog-post.html
http://www.valaiyugam.com/2012/03/blog-post_21.html
Rabbani said...
உங்களுக்கு விருப்பம் இருந்தால் மதங்களை பற்றிய கீழ்க்கண்ட பதிவுகளை படித்து பாருங்க////////////////////////
நண்பரே உண்மையில் அந்த சுட்டியை பார்த்து வியப்பாக இருக்கிறது . அதை நான் பார்க்க வில்லை . நான் மானி பற்றி எழுத இருக்கும் தகவலும் அதில் இருக்கிறது . இருவரும் ஒரே புத்தகத்தில் இருந்து தகவல் எடுத்துள்ளோம் என்று தெரிகிறது . . இன்னும் புத்தர், மகாவீரர் , பற்றி எல்லாம் எழுதலாம் என்று நினைத்திருந்தேன் . எதற்கும் அங்கு இதை பற்றி எதுவும் எழுதி இறக்கிறதா என்று பார்த்துவிட்டு எழுதுகிறேன் . சுட்டி தந்தமைக்கு நன்றி .
நல்ல விசயம்...!பல மதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் சில மதங்களைப் பற்றி எழுதும் போது விவாதம் சூடு பறக்கலாம்...தயாராக இருங்கள்..!
அஞ்சா ஸிங்கமே,
அட அட ...நானும் இதே போல ஒரு பதிவை தயார் செய்துக்கிட்டு இருக்கேனையா, மணிசையிஸம்(manichaeism), ஸொராஷ்டம், ஜுடாயிசம்னு , எப்படி ஒரு வடிவம் கொண்டு வருவதுன்னு யோசித்துக்கிட்டு இருந்தேன் சட்டுப்புட்டுன்னு பதிவை போட்டு எனக்கு ஆப்பு வச்சுட்டீரே :-((
புரொட்டொ இன்டோ-இரானி-ஈரோப்பியன் மதம் என புடிச்சு படிச்சா ...மார்க்க பந்துக்களின் வேஷம் வெளியில் வந்துவிடும்.
மணி மதத்தினை(ஒரு வகையான கிருத்துவ மதம் போல) காப்பி அடிச்சு தான் இஸ்லாமே வந்துச்சுன்னும் தெரியும் :-))
நான் 3000 ஆண்டுல இருந்து ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன்..சரி நடத்தும் ,வழக்கம் போல நான் பொறுமையா நீட்டி முழக்கி போட்டுக்கிறேன்.
பல்வேறு பதிவுகள் பற்றி அறிய வாயப்பு! தொடரட்டும்!பணி!
நல்ல விஷயத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள். நிறைய புது விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும்னு புரியுது. நடத்துங்க... அருமை.
வீடு சுரேஸ்குமார் said...
நல்ல விசயம்...!பல மதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் சில மதங்களைப் பற்றி எழுதும் போது விவாதம் சூடு பறக்கலாம்...தயாராக இருங்கள்..!.....................................//////////////////////////////////////
கண்டிப்பாக சுரேஷ் .அநேகமாக மானி மதத்தை பற்றி எழுதும்போது லேசாக பற்றி கொள்ளும் என்று நினைகிறேன் ..
வவ்வால் said...
மணி மதத்தினை(ஒரு வகையான கிருத்துவ மதம் போல) காப்பி அடிச்சு தான் இஸ்லாமே வந்துச்சுன்னும் தெரியும் :-))
நான் 3000 ஆண்டுல இருந்து ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன்..சரி நடத்தும் ,வழக்கம் போல நான் பொறுமையா நீட்டி முழக்கி போட்டுக்கிறேன். ............................////////////////////////
உண்மையில் நபி அவர்கள் அதிகம் காப்பி அடித்தது மானி மதத்தில் இருந்துதான் .. அதை ஒழித்து விட்டார்கள் . அடுத்து யூத மதம் .முயற்சி செய்கிறார்கள் . நபிக்கு இறை வார்த்தை இறங்கிய விதமும் . அதை அவர் வெளிபடுத்திய விதமும் அச்சு அசல் மானியின் இரண்டாம் பதிப்பு ..............
நீங்க எழுதுங்கள் வவ்வால் உங்கள் எழுத்தின் தரம் நன்றாக இருக்கும் . படிக்க ஆவலாக இருக்கிறேன் ..
புலவர் சா இராமாநுசம் said...
பல்வேறு பதிவுகள் பற்றி அறிய வாயப்பு! தொடரட்டும்!பணி!..........................////////////////////////////////
நன்றி ஐயா ..........
நல்ல தகவல் பகிர்வு.. அணைத்து மதங்களும் அதன் சடங்குகளும் மனிதன் தோற்றிவித்த ஒன்று, இறைவன் அனைவருக்கும் ஒருவனே நம் சிந்தனையும் கற்பனையும் தான் வேவ்வேறு.. தொடருங்கள் தோழரே!
பால கணேஷ் said... நல்ல விஷயத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள். நிறைய புது விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியும்னு புரியுது. நடத்துங்க... அருமை......................../////////////////////////
வாங்க அண்ணே ஏதோ சிறு முயற்சி ..............
தற்போது உலகிலேயே இந்தியாவில் தான் இம்மதத்தினர் அதிகமாக உள்ளனர். ஆபிரகாமிய மதங்களின் முன்னோடி.
//பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் . //
என்ன இப்படி சொல்லிட்டீங்க. சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதி ஒழிய மக்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லுங்கள். + ஓட்டு கிடைக்கும்.
@Ayesha Farook said...
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி ...................
குட்டிபிசாசு said...
என்ன இப்படி சொல்லிட்டீங்க. சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதி ஒழிய மக்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லுங்கள். + ஓட்டு கிடைக்கும்.................../////////////////////
ஹி ஹி உங்களுக்கு குசும்புதான் .............நாங்கள் யாரையும் கொல்லவில்லை அவர்கள்தான் கழுத்தால் எங்கள் வாளை தாக்கீனார்கள் என்று சொல்வார்கள் .................அவங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா .............
// பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் // பல மதங்களின் வீழ்ச்சியும் எழுச்சியும் இப்படித் தான் அரங்கேறுகின்றது ...
//1 ,50000 லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் // நான் நினைக்கிறன் ரத்தன் டாட்டா கூட பார்சி என்று.. சரியாக தெரியவில்லை...
நல்ல தேடல் தொடருங்கள் தொடர்கிறோம்
ஸிங்கம்!கோதாவில் இறங்கிடுச்சா:)
எரிக்காமலும்,புதைக்காமலும் கழுகுக்கு இரையாக்குவது பார்சிகளின் வழக்கம் கூட.பம்பாயின் சர்ச்கேட் அருகில் பார்சி படையல் வைக்கிறார்கள் என நினைக்கின்றேன்.
பிரமிடுக்கு சொந்தக்காரன் எகிப்தியன் ஒருவன் ஒரு முறை இந்தியர்கள் ஏன் இறந்தவர்களை எரிக்கிறீர்கள்.இறந்த உடம்பு ரொம்ப பாவம்ல்ல என்றான்.பாக்டீரியாக்கள் பரவாது என்ற விஞ்ஞானத்தை சொல்வதா?செததும் துன்புறுத்துகிறோமே இம்சையை சொல்வதா?
சிங்கம்...
நீ கலக்குயா.....
காத்திருக்கோம்....
பல்வேறு பதிவுகள் பற்றி அறிய வாயப்பு! தொடரட்டும்!பணி!
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...
அஞ்சா ஸிங்கமே,
//.அவங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா .............//
அது கூட பரவாயில்லை, கொலை,கொளை,கற்பழிப்பு, ஏன் ஒரு பிரிவு இஸ்லாமியர்களையே கொல்லுறிங்க கேட்டாப்போதும் அவங்க எல்லாம் தூய இஸ்லாமியர்கலே இல்லைனு சொல்லிடுவாங்க, இரான்,இராக், லிபியா, இந்தோனேஷியா பாகிஸ்தான் இல் இருக்கவங்க எல்லாம் இஸ்லாமியரே இல்லைனு சொல்லிட்டு உலகில் வேகம பரவுதுன்னும் சொல்வாங்க,அதை எல்லாம் கேட்டால் சிரிக்கிறதா ,அழ்வுறதான்னே தெரியாது... ஒரே கன்பியூசன் :-))
லாகிரி வஸ்துக்கு (அதான் போதை) எதிரின்னு சொல்லிக்கிட்டு ஆப்கானில் குடிசை தொழில் போல எல்லாரும் ஓபியம்,ஹெராயின் தயாரிப்பாங்க ,முல்லா ஓமரை(முன்னர் ஓசமா) தலைவருன்னு சொல்லுவாங்க :-))
போதை மருந்து மொத்த வியாபாரியை தலைவருன்னு சொல்லிட்டு ,ஏதோ கொஞ்சமா டாஸ்மாக்ல தாக சாந்தி செய்றவங்களை குற்றவாளின்னு சொல்றாங்கப்பு :-))
பகார்டி ஆப்பிள் இப்படியெல்லாமா வேலை செய்யுது...
//பகார்டி ஆப்பிள் இப்படியெல்லாமா வேலை செய்யுது...//
என்னது பக்கோடா ஆப்பிள் சாப்பிட்டா இப்படியெல்லாம் வேலை செய்யுமா?சொல்லவேயில்லை:)
வணக்கம் சகோ
அருமையான் தொடக்கம். தொடர்கிறேன்!!
நன்றி!!
இப்போதே கண்டேன்.நல்லதொரு முயற்சி.. தெரியாத செய்திகளை தெரியப்படுத்துங்கள்.. முந்தைய மதங்களைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள உதவும்..தொடருங்கள்..
சீனு said... // பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் // பல மதங்களின் வீழ்ச்சியும் எழுச்சியும் இப்படித் தான் அரங்கேறுகின்றது ...
//1 ,50000 லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் // நான் நினைக்கிறன் ரத்தன் டாட்டா கூட பார்சி என்று.. சரியாக தெரியவில்லை......................................////////////////////
///////////////////////////
உண்மைதான் சீனு ..இந்திராகாந்தியின் கணவர் பெரோஸ் காந்தியும் ஒரு பார்சிதான் .......................
ராஜ நடராஜன் said... ஸிங்கம்!கோதாவில் இறங்கிடுச்சா:)
எரிக்காமலும்,புதைக்காமலும் கழுகுக்கு இரையாக்குவது பார்சிகளின் வழக்கம் கூட.பம்பாயின் சர்ச்கேட் அருகில் பார்சி படையல் வைக்கிறார்கள் என நினைக்கின்றேன்.........................////////////////////////////////
ஆமாம் நான் அங்கு தான் பிறந்தேன் ... சிலர் வீட்டிலேயே பருந்தை வளர்ப்பதை பார்த்திருக்கிறேன் ....
நாய் நக்ஸ் said...
சிங்கம்...
நீ கலக்குயா.....
காத்திருக்கோம்..................../////////////
//////////////////////////////////////
யோவ் நக்ஸ் எதை எதோடு கலக்கணும்ன்னு உனக்குதான் நல்லா தெரியும் ...............
சுவனப் பிரியன் said...
பல்வேறு பதிவுகள் பற்றி அறிய வாயப்பு! தொடரட்டும்!பணி!...........................///////////////////
வாங்க ஜி ................நன்றி
! சிவகுமார் ! said...
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...................//////////////////
சிவா எண்பதுகளில் வந்த படத்தில் இரவு எட்டுமணிக்கு நெருப்பு மூட்டி ஒரு தாடிக்காரன் கையில் டோலாக்கு தட்டிக்கிட்டு பாட்டு பாடுவானே . அந்த கேரக்டர் உனக்கு கச்சிதமா பொருந்தும்யா .............
வவ்வால் said...
///போதை மருந்து மொத்த வியாபாரியை தலைவருன்னு சொல்லிட்டு ,ஏதோ கொஞ்சமா டாஸ்மாக்ல தாக சாந்தி செய்றவங்களை குற்றவாளின்னு சொல்றாங்கப்பு :-))/////////////////
தல ஆப்கானில் தாலிபான் ஆட்சிகாலத்தில்தான் அதிகமாக ஓபியம் பயிரிடப்பட்டது .. மக்களை கட்டாயபடுத்தி பயிரிட வைத்தார்கள் .ஆனால் தலைவர் சொல்றாரு தாலிபான் ஆட்சியில் தான் பாலாரும் தேனாறும் ஒடிசி என்று .
பாமியான் புத்தர் சிலை உடைப்புக்கு ஒரு விளக்கம் சொன்னாரு . அங்கு வழிபாடு நடக்க வில்லை அதனால் அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று .
Philosophy Prabhakaran said...
பகார்டி ஆப்பிள் இப்படியெல்லாமா வேலை செய்யுது...////////////////
//////////////////////////////////////
ஏன் பிரபா உனக்கு எதுவும் பண்ணலையா ...........?
இந்நேரம் நாலு பதிவாவது போட்டிருக்க வேண்டாமா ....................
ராஜ நடராஜன் said...
//பகார்டி ஆப்பிள் இப்படியெல்லாமா வேலை செய்யுது...//
என்னது பக்கோடா ஆப்பிள் சாப்பிட்டா இப்படியெல்லாம் வேலை செய்யுமா?சொல்லவேயில்லை:)..............////////
அண்ணே நீங்க அவ்வளவு அப்பாவியா ,,,,,,,?
சார்வாகன் said...
வணக்கம் சகோ
அருமையான் தொடக்கம். தொடர்கிறேன்!!
நன்றி!!..............................///////////////////////////////////////////
நன்றி சாவார்கன்வாள்..........
மதுமதி said...
இப்போதே கண்டேன்.நல்லதொரு முயற்சி.. தெரியாத செய்திகளை தெரியப்படுத்துங்கள்.. முந்தைய மதங்களைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள உதவும்..தொடருங்கள்..................///////////////////////////////
வாங்க தலைவரே வருகைக்கு நன்றி ..............
பார்சி பார்சிக்கள் பற்றி படித்திருக்கிறேன் விரிவான தகவலுக்கு நன்றி.
அறிந்து கொள்கிறேன்... தொடர்கிறேன்...
நக்கீரன் சொல்படி நீர் கலக்கவும். சோடாவை மட்டும் பார்த்து கலக்கவும்.
முதல் பதிவு அருமையாக ஆரம்பித்திருக்கிறது. வழ்த்துகள்.
பார்சிகள் பற்றிய கூடுதல் தகவலாக :
இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு, 90 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் பார்சி மத மக்களை "ஏழை பார்சிகள் என அறிவிக்க வேண்டும் என, பார்சிகள் சமய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார சமுதாய மாக பார்சிகளே உள்ளனர். இவர்கள் இந்தியாவில் "மைக்ரோ மைனாரிட்டி எனப்படும் நுண்ணிய சிறுபான்மையினராக உள்ளனர். கி.பி. 8ம் நூற்றாண்டில் அராபியர்கள் பாரசீகத்தை முழுவதுமாக வென்ற பிறகு, இந்தியாவில் குடியேறியவர்களே பார்சிகள் ஆவர்.ஈரானின் பண்டைய மதமான ஜொராஷ்டிரத்தை இவர்கள் பின்பற்றுகின்றனர். மும்பை மற்றும் ஆமதாபாத்தில் இவர்கள் உள்ளனர். இந்தியாவின் "முதுபெருங்கிழவர் என அழைக்கப்பட்ட தாதாபாய் நவுரோஜி, பார்சி சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் லண்டன் பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். தொழில் அதிபர் டாடாவும், பார்சி சமயத்தைச் சேர்ந்தவர்.
நன்றி : http://melathirupanthuruthi.com/B1Detailed.aspx?inid=9313
நல்ல முயற்சி நண்பரே.புதிய தகவல்களுக்கு நன்றி.
அருமையான பதிவு சகோ. சொராஸ்ட்ரியம் எனப்படும் பார்சி மதத்துக்கும் ஆதி-ஆர்ய மதத்துக்கும் சம்பந்தம் நிறைய உண்டு, சொற்கள் ஒற்றுமை, வழிப்பாட்டு ஒற்றுமை எல்லாம் நிறைய உண்டு !!!
பார்சி மதம் அழிந்தமைக்கு இஸ்லாம் முக்கிய காரணமாகும், இருந்த போதும் பார்சி மதத்தின் தாக்கத்தால் தான் கிறித்தவமும், இஸ்லாமும் இரண்டாக பிரிந்தன .. ஆம் கிறித்தவம் பாரசீகம் அடைந்த போது கிழக்கு வைத்திக கிறித்த பிரிவு உண்டானது, அதே போல இஸ்லாம் பாரசீகம் அடைந்த போது சியாப் பிரிவு உண்டானது ...
Post a Comment