Thursday, April 5, 2012

இப்பதிவு பிலாசப்பி பிரபாகரனுக்கு டெடிக்கேட் செய்யபடுகிறது

v
                                                       இது என் 50 தாவது பதிவு 

                                                        
சம்பவம் ஒன்று

நண்பர்களுடன் ஒருநாள் சென்னையில் உள்ள மிக மட்டமான பராமரிப்பு உடைய டாஸ்மாக் பார் ஒன்றில் நுழைந்தேன் .
உள்ளே நுழைந்துடன் குடலை பிரட்டும் நாற்றம் . சுத்தம்  சுகாதாரம் பற்றி எல்லாம் யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை . இங்கு வேண்டாம் நாம் வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்ப எத்தனிக்கும் போது ஒரு நான்கு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருவன் அந்த பாருக்குள் நுழைந்தான் .

வந்தவன் நேராக தண்ணீரும் எச்சிலும் கலந்து வழிந்துகொண்டிருந்த ஒரு டேபிளை லேசாக கையால் துடைத்து விட்டு அந்த குழந்தையை அதன் மேலே அமரவைத்துவிட்டு சரக்கு வாங்க சென்றுவிட்டான். எனக்கு ரத்தம் லேசாக சூடாக ஆரம்பித்தது . அவன் வரும்வரை அங்கே காத்திருந்தேன். கையில் ஒரு பாட்டிலுடன் வாட்டர் பாக்கெட் மற்றும் பொடிமாஸ் வாங்கிவந்தவன் அந்த குழந்தை அருகே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான் . போடிமாசையும் அந்த குழந்தைக்கு ஊட்டிவிட்டான்.

அவனிடம் சென்று யோவ் அறிவு இருக்கா குழந்தையை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிவரலாமா . இது உன் குழந்தையா ? இதை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடிக்க உனக்கு என்ன கேடு . இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உலகை கூர்ந்து கவனிக்கிறார்கள் அதன் எதிர்காலத்தை நாசமாக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நீ குடித்து விட்டு மட்டை ஆனால் இந்த குழந்தை நிலை என்ன  என்று கோவத்தோடு கேட்டேன் . என்னை லேசாக முறைத்து
பார்த்து விட்டு அவன் சொன்னான் . வந்தமா குடிச்சமா போனமான்னு இரு என் புள்ளையை எனக்கு எப்படி வளர்க்கனும்ன்னு தெரியும் .பெருசா புத்திசொல்ல வந்துட்டாரு போடா போத்திக்கிட்டு என்று .

அதற்க்கு மேல் நான் எதுவும் பேசவில்லை ஆனால் அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது . நார்வே நாட்டில் ஒரு இந்திய குழந்தைக்கு வெறும் கையால் உணவு ஊட்டிய பெற்றவர்களை அந்த அரசாங்கமே தண்டித்தது நினைவுக்கு வருகிறது . அங்கு அரசாங்கம் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறையை இங்கே பெற்றவர்கள் கூட காட்டுவதில்லை . இந்த குற்றசாட்டில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது .
இந்திய பெற்றோர்கள் தான் ரொம்ப பாசமானவர்கள் என்றும் மற்ற நாட்டு காரர்கள் எல்லாம் குழந்தை பெற்று தெருவில் வீசிவிடுபவர்கள் போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை இங்கு விதைத்திருக்கிறார்கள் .

உண்மையில் இந்திய பெற்றோர்கள் மிகவும் சுயநல வாதிகள் என்றே கருதுகிறேன் . அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அதிகாரத்தை செலுத்துகிறார்கள் . அல்லது பாசம் என்ற போர்வையில் செண்டிமெண்டல் ப்ளாக்மெயில் செய்கிறார்கள் . காரணம் முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதும் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற காரணம் . சுயமாக சிந்திப்பது அவனுக்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை குடுப்பது .விலகி நின்று கண்காணிப்பது அல்லது அவன் சுதந்திரத்தை மதிப்பது . போன்ற எந்த விசயமும் இங்கே யாருக்கும் பிடிப்பதில்லை
பெத்தவங்க பேச்சை தட்டாத பிள்ளை ரொம்ப கீழ்படிந்த பிள்ளை . எதிர்த்து பேசாத பிள்ளை .இவர்கள் தான் நல்ல பிள்ளைக்கு அடையாளமாக நாம் கொண்டாடுகிறோம் . மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நாம் பிள்ளை வளர்க்கிறோமா அல்லது அடிமை வளர்க்கிறோமா ?
முடிவெடுக்க முடியாமல் திணறும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன் . அற்ப காரணங்களுக்கு தற்கொலை செய்பவர்கள் .வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் என்று வீட்டை விட்டு ஓடியவர்கள் என்று இந்த பட்டியல் நீளும்
வெறும் கலாச்சார போதை ஊட்ட பட்ட நாட்டில் இப்படி பட்ட பெற்றோர்கள் தான் பிறப்பார்கள் .
தங்களை உயர்த்தி கொண்டு மற்றவர்களை தாழ்வாக நினைப்பார்கள். தங்கள் தவறை சுட்டிக்காட்டும் தகுதி யாருக்கும் இல்லை என்று நினைப்பார்கள் . இந்தியன் என்பதற்கு பெருமை படவேண்டும் என்று சொல்லி கொள்வார்கள் .
காரணம்தான் சொல்ல மாட்டார்கள் . நிச்சியமாக இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமை பட நியாயமான
காரணம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை .*********************************************************************************************************************
                            
                         
சம்பவம் இரண்டு

புரட்சிதலைவி மாண்பிமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் அம்மா (குலோ துங்குவை விட்டிருந்தால் மன்னிக்கவும் ) அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் அப்படி ஒரு பந்தலில் நடந்த சம்பவம்
மைக் வைத்து போவோர் வருவோர் எல்லோரிடமும் அம்மாவின் கருணையை பறை சாற்றிகொண்டிருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் யாரும் உள்ளே வராத வெறுப்பில் இருந்தார் .
அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பெருசு வந்து மோர் குடிச்சிட்டு போ என்று அழைத்தார் .
அவ்ளோதான் பெருசு ஏற்கனவே புல் போதை வந்ததே கோவம் .

த்தா ...பீப்....மோர் குடுக்குறானாம் மோரு......பீப்.............பீப்............அதை உன்கிட்ட வாங்கி குடிக்கிறதுக்கு விஷத்தை குடிச்சிட்டு போயிடுவேன் .............. ....பீப்.............பீப்........பீப்.............பீப்....கரண்ட்டு பில்லு ஏத்துனே பால் விலை ஏத்துனே
பஸ் டிக்கட் விலையை ஏத்துனே ..பாவிகளா சரக்கு விலையையும் ஏத்தீட்டியே ........பீப்.............பீப்....உன் மோரை கொண்டுபோய் ....பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்....ஊத்து....பீப்.............பீப்........பீப்.............பீப்....

அங்கு இருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் சட்டையை பிடித்து பெருசை சிறிதுதூரம் தள்ளி கொண்டுபோய் விட்டு வந்தார் ..
இதே சம்பவம் உடன்பிறப்பின் பந்தலில் நடந்திருந்தால் அந்த பெருசின் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்தேன் விடை தெரியவில்லை ....

***********************************************************************************************************************


அனுபவம் மூணு

நிறையமுறை சாகசபயணம் செய்திருக்கிறேன் . ஆனால் என் வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய சாகச பயணமாக நான் கருதுவது குடித்துவிட்டு மட்டை ஆன நண்பனை வீடுவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது தான் .
என்ன திரிலிங் என்ன சேசிங் .... அந்த நண்பர் சம்மதித்தால் அந்த சாகச பயணம் பற்று ஒரு பதிவு வரலாம் பார்ப்போம்
என்ன சொல்கிறார் என்று ....................


 

26 கருத்து சொல்றாங்க:

கோவை நேரம் said...

என்னது...மட்டமான பராமரிப்பா...தமிழ்நாட்டுல இதவிட நல்ல பார் எங்க கிடைக்கும்...

அஞ்சா சிங்கம் said...

கோவை நேரம் said...

என்னது...மட்டமான பராமரிப்பா...தமிழ்நாட்டுல இதவிட நல்ல பார் எங்க கிடைக்கும்...//////////
உண்மைதான் ஆனால் அதை பற்றி கொஞ்சமும் அலட்டிகொள்ளாத நம் அடிமை புத்தியை என்ன வென்று சொல்லுவது
முதலாளிக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் . ஆனால் அவர்கள் அப்படி இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை

சக்தி கல்வி மையம் said...

அந்த நண்பர் யாரு? தனியாக மெயில் பண்ணவும்.

சக்தி கல்வி மையம் said...

ஒரு வேலை டெடிகேட் பண்ணி இருக்கீங்களே அவரா? @ டவுட்டு.

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அந்த நண்பர் யாரு? தனியாக மெயில் பண்ணவும்...........//////////
!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு வேலை டெடிகேட் பண்ணி இருக்கீங்களே அவரா? @ டவுட்டு.////////////////////
க .க. க ..போ .........

வைகை said...

போனமா..சரக்கடிச்சமா வந்தமான்னு இல்லாம உனக்கு ஏன்யா இந்த நாட்டத் திருத்துற வேலையெல்லாம்? அப்பறம் ஓவரா திருந்திட்டானுங்கன்னா டாஸ்மாக் எல்லாம் மூடிட்டு போயிருவாங்க! அப்பறம் குடிமகன்களின் கதி? :-)

நாய் நக்ஸ் said...

வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய சாகச பயணமாக நான் கருதுவது குடித்துவிட்டு மட்டை ஆன நண்பனை வீடுவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது தான் .
என்ன திரிலிங் என்ன சேசிங் .... /////

இங்க தான் தப்பு....
நாமளும் மட்டை ஆனா இன்னும் நிறைய பார்க்கலாம்...
அனுபவம் பத்தாதோ...

நாய் நக்ஸ் said...

ஒரே தத்துவமா இருக்கு...
பார்-க்கு போய் இன்னும் இன்னும் கத்துக்கலாம்...
அடிக்கடி போகவும்....

பிறகு நித்யானந்தா போல தத்துவமா பொழியலாம்.

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

போனமா..சரக்கடிச்சமா வந்தமான்னு இல்லாம உனக்கு ஏன்யா இந்த நாட்டத் திருத்துற வேலையெல்லாம்? அப்பறம் ஓவரா திருந்திட்டானுங்கன்னா டாஸ்மாக் எல்லாம் மூடிட்டு போயிருவாங்க! அப்பறம் குடிமகன்களின் கதி? :-).........................///////////////////////////////

அதான் போத்திகிட்டு போயிடோம்லே உங்கள திருத்துறது என் வேலை கிடையாது . முதல்ல என்ன நான் திருத்திக்கிறேன் .

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய சாகச பயணமாக நான் கருதுவது குடித்துவிட்டு மட்டை ஆன நண்பனை வீடுவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது தான் .
என்ன திரிலிங் என்ன சேசிங் .... /////

இங்க தான் தப்பு....
நாமளும் மட்டை ஆனா இன்னும் நிறைய பார்க்கலாம்...
அனுபவம் பத்தாதோ.....////////////
ஆமாம் தல பயிற்சி போதவில்லை ......

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

ஒரே தத்துவமா இருக்கு...
பார்-க்கு போய் இன்னும் இன்னும் கத்துக்கலாம்...
அடிக்கடி போகவும்....

பிறகு நித்யானந்தா போல தத்துவமா பொழியலாம்...////
மலை எங்கே மடு எங்கே .. இருந்தாலும் இதை கேட்கும் போது கிளுகிளுப்பா இருக்கு .........

வைகை said...

அஞ்சா சிங்கம் said...
அதான் போத்திகிட்டு போயிடோம்லே உங்கள திருத்துறது என் வேலை கிடையாது . முதல்ல என்ன நான் திருத்திக்கிறேன்///


இதுல திருத்திகிறதுக்கு என்ன இருக்கு? என்ன கொடுமைனா நாட்டுக்கு அதிகமான வருமானம் தர்ற இந்த துறைதான் ஒரு வரைமுறை இல்லாம இருக்கு... சில படங்களுக்கு குழந்தைகளோட போனா டிக்கெட் கிடையாது... ஆனா டாஸ்மாக்ல மட்டும் குழந்தையோடையும் போகலாம்.. குழந்தைகள் கூட போகலாம்... பத்து ரூபா கொடுத்து டீக் குடிக்கிற கடைல கூட சுத்தம் பார்க்கிற தமிழன்... இங்க மட்டும்தான் பல்லி செத்துக்கிடந்தாலும் அத தூக்கி போட்டுட்டு அந்த தண்ணிய மிக்சிங் யூஸ் பண்றான்.. அட போங்க பாஸ்...

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அஞ்சா சிங்கம் said...
அதான் போத்திகிட்டு போயிடோம்லே உங்கள திருத்துறது என் வேலை கிடையாது . முதல்ல என்ன நான் திருத்திக்கிறேன்///


இதுல திருத்திகிறதுக்கு என்ன இருக்கு? என்ன கொடுமைனா நாட்டுக்கு அதிகமான வருமானம் தர்ற இந்த துறைதான் ஒரு வரைமுறை இல்லாம இருக்கு... சில படங்களுக்கு குழந்தைகளோட போனா டிக்கெட் கிடையாது... ஆனா டாஸ்மாக்ல மட்டும் குழந்தையோடையும் போகலாம்.. குழந்தைகள் கூட போகலாம்... பத்து ரூபா கொடுத்து டீக் குடிக்கிற கடைல கூட சுத்தம் பார்க்கிற தமிழன்... இங்க மட்டும்தான் பல்லி செத்துக்கிடந்தாலும் அத தூக்கி போட்டுட்டு அந்த தண்ணிய மிக்சிங் யூஸ் பண்றான்.. அட போங்க பாஸ்...
///////////////////////////////////////////////////
உண்மைதான் தல சுகாதார துறைன்னு ஒன்னு இருக்குறதா நியாபகம் . இவனுங்க பெட்டி கடையில இருக்குற போலி குளிர்பானம் கைப்பற்றுவதோடு சரி . பெரிய முதலாளி மட்டும் பாதிக்க படகூடாது மக்கள் எக்கேடு கேட்டாலும் கவலை இல்லை .

Unknown said...

கண்ணே காந்தா சரக்கை பாத்தியா!.......

ஏன்யா அந்தாளுக்கு தான் பித்த உடம்பாச்சே..ஏன் அம்புட்டு....ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

யோவ்...யாருய்யா அந்த மட்டையான ஃபிரண்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஞ்சாங்.... குஞ்சாங்......

Unknown said...

சீக்கிரம் அந்த பதிவை போடுங்க பாஸு. தலைப்பு: 'ஒரே ஒரு ப்ரெண்டை வச்சிட்டு நான் படுற அவஸ்த இருக்கே.. அய்யுயய்யோ...."

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

சீக்கிரம் அந்த பதிவை போடுங்க பாஸு. தலைப்பு: 'ஒரே ஒரு ப்ரெண்டை வச்சிட்டு நான் படுற அவஸ்த இருக்கே.. அய்யுயய்யோ...."////////////////////////
பாருங்க மக்களே தலைப்பு எல்லாம் எடுத்து குடுக்குறாரு இந்த பழி பாவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம்யா ஒரு பச்ச மண்ண போய் இப்படி பாய்சனாக்குறீங்களே........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம்யா ஒரு பச்ச மண்ண போய் இப்படி பாய்சனாக்குறீங்களே......../////////////////

யாருயா பச்சை மண்ணு ?
எங்க சங்க தலைவரே அவருதான் ............

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

யோவ்...யாருய்யா அந்த மட்டையான ஃபிரண்டு?............................//////////////////

இந்த கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை?

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

கண்ணே காந்தா சரக்கை பாத்தியா!.......

ஏன்யா அந்தாளுக்கு தான் பித்த உடம்பாச்சே..ஏன் அம்புட்டு....ஹிஹி!.......................////////////////////
ஒரிஜினல் மட்டும் அவருக்கு ஒத்துக்கமாட்டுது .........

Manimaran said...

இது கூட பரவா இல்லை ..ஒருந்தன் தன கைகுழந்தையைத் தூக்கிகிட்டு பிட்டு படம் பாக்க வந்தான்.இந்தக் கொடுமையை எங்கே போயி சொல்றது....

Thava said...

கலக்கல் பதிவு..நன்றிங்க

CS. Mohan Kumar said...

நண்பா சத்யம் டிவி நிகழ்ச்சி பத்தி பதிவு எழுதிருக்கேன் படிச்சு பாருங்க

http://veeduthirumbal.blogspot.in/2012/04/blog-post_27.html

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Popular Posts