Friday, October 14, 2011

உயிரின் எடை 21 அயிரி

vஎ ட்ரீம் வேல்ட் என்ற நிறுவனம் சார்பில் இ.கலைவாணன் தயாரித்துள்ள படம் உயிரின் எடை 21 அயரி 


படத்தின் ஆரம்பமே நமக்கு புரிய வைத்து விடுகிறது இன்னும் இரண்டரை 
மணிநேரம் வரை தியேட்டர் திரையில் இருந்து நாம் அமர்ந்திருக்கும் 
சீட் வரை ரத்தம் தெறிக்க போகிறது என்று .

ஆனால் நல்லவேளையாக நாம் எதிர்பார்த்த அளவிற்கு பயங்கரம் இல்லை. 
ஈஸ்வர் என்கிற ஒரு ரவுடி அச்சா என்கிற ஒரு டான் . 
கொலை செய்வது இவர்கள் தொழில். 
உயிரின் மதிப்பை பற்றி கொஞ்சம்கூட கவலை படாத கதாநாயகன் .
அதன் மதிப்பு அறிந்து வாழ ஆசை படும்போது அது அவனுக்கு கிடைத்ததா ?கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார் நல்ல நடிப்பு.
ஆரம்பத்தில் நமக்கு அன்னியமாக தெரிந்தாலும் விரைவிலேயே
 படத்தோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார் .
புதுமுகம் வினிதா என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
 தேவை அற்ற காதல் காட்சிகள் எதுவும் இல்லாத தமிழ் சினிமா ஆச்சரியம்தான் .
படத்தில் நடித்த எல்லாரையும் மிக சுலபமாக ஓரம் கட்டிவிடுகிறார் திலகன்.
ஆஹா என்ன ஒரு வசன உச்சரிப்பு. அச்சா என்கிற கதாபாத்திரம்
அவருக்கு அம்சமாக பொருந்துகிறது .
அநேகமாக இதுதான் இவர் நடித்த கடைசி படம் என்று நினைக்கிறேன் .

முதல் பாதி முழுவதும் ரவுடி வெட்டு குத்து என்று இருந்தாலும்.
நல்லவேளையாக மதுரையை நமக்கு காட்டவில்லை அதற்காக
இயக்குனருக்கு நன்றி .

இரண்டாம் பாதி கொஞ்சம் அன்பேசிவம் மாதிரி .
படத்தின் வேகத்தை குறைக்கிறது என்றாலும்
அந்த மலை கிராம மக்களாக வரும் கதாபாத்திரங்கள்
படத்தின் சுவாரசியம் குறையாமல் பார்த்து கொள்கிறார்கள் .


படத்தில் பல இடங்களில் பண பற்றாக்குறை தெரிகிறது.
 கொஞ்சம் காலதாமதமாக வெளிவந்த படம் என்றாலும்
படத்தில் அனைவருமே புதுமுகம் என்றிருந்தாலும்.
படம் போர் அடிக்காமல் இருப்பதற்கு திலகன் மிக முக்கிய காரணம்.

தமிழகத்தின் முதல் பெண் எடிடர் கிருத்திகா சிறப்பாக செய்துள்ளார்.
 படத்தில் மூன்று பாடல்கள் இடம்பிடித்துள்ளது .
மூன்றும் வெவேறு ரகம் . படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது .

பட்ஜெட் படம் என்பதால் படத்தில் தெரியும் சில குறைகள் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது .

மற்றபடி நல்ல மெசேஜ் உள்ள படம் . 


15 கருத்து சொல்றாங்க:

! சிவகுமார் ! said...

ஒரே ஏரியா ஆளுங்களா இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா?

Philosophy Prabhakaran said...

இந்த பதிவு நீங்க எழுதினது தானான்னு டவுட்டா இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ படம் பார்க்கலாம்னு சொல்றீங்க....

rajamelaiyur said...

//
மற்றபடி நல்ல மெசேஜ் உள்ள படம் .
/

அப்ப பாக்கலாம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

Unknown said...

நல்ல மெசேஜ் உள்ள படம்?????

சக்தி கல்வி மையம் said...

மாப்ள இப்படி ஒரு படம் வந்திருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்ணா.... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்க்ளாங்ணா........

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

ஒரே ஏரியா ஆளுங்களா இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா?
ஹி ஹி ஹி ........தமாசு தமாசு ..........

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

இந்த பதிவு நீங்க எழுதினது தானான்னு டவுட்டா இருக்கு.../////////////

நான்தான் நான்தான் நானே தான் ஐயா ...........
பின்னே மண்டபத்துல யாரோ எழுதி குடுத்தத இங்க போட்டிருகிறேன்னு நினைதீங்களா?

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ படம் பார்க்கலாம்னு சொல்றீங்க....
ஒரு வேலை உங்க பகுதியில் ரிலீஸ் ஆனால் ?

அஞ்சா சிங்கம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
மற்றபடி நல்ல மெசேஜ் உள்ள படம் .
/

அப்ப பாக்கலாம்.

ஆமாம் .......

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல மெசேஜ் உள்ள படம்?????
//////////////////////

படத்துல தண்ணி அடிக்கிறாங்க மார்பியஸ் பாட்டில காட்டுறாங்க .
இது எல்லாம் நல்ல மெசேஜ் தானே .........................

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்ணா.... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்க்ளாங்ணா........
////////////////////////////////////

என்ன பண்றது இப்படியே பழகிடிச்சி.............

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள இப்படி ஒரு படம் வந்திருக்கா?

அட ஆமாம் தல ...........

Popular Posts