Thursday, October 31, 2013

ஆரம்பம் -விமர்சனம்

v

தலைக்கு இன்னும்  மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் .
 என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தான் தோன்றுகிறது .
இந்து நாளிதழில் இதுவரை வந்த அஜித்தின் திரைப்படங்களின் வசூல் சாதனையை ஆரம்பம் முறியடிக்கும் என்று போட்டிருந்தார்கள் .அது உண்மையாக கூடிய சாத்தியம் இருக்கிறது .

படத்தின் ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது . மும்பையில் சில இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கிறது . அதை செட் செய்வது அஜித். அதன் பிறகு அப்பாவியான ஆர்யாவை கடத்துகிறார். நயன்தாராவை மிரட்டி ஆரியாவை பணிய வைக்கிறார். இது எல்லாம் மங்காத்தா தனமாக இருக்கிறதே என்று யோசித்து கொண்டிருக்கும் பொது இடைவேளை வந்துவிடுகிறது . இடைவேளையின் பொது சொல்கிறார் இது முடிவு இல்லைடா ஆரம்பம் என்று .

உண்மைதான் இடைவேளைக்கு பிறகு கதை வேறு திசையில் பயணிக்கிறது . சாரி பறக்கிறது . ஆயுத பெற ஊழல் , ஹோம் மினிஸ்டர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் இதனால் உயிரை இழக்கும் நண்பனின் குடும்பம். பழி வாங்க புறப்படும் ஹீரோ என்று ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை வஸ்துக்களையும் அளவு மீறாமல் சரியாக கலந்து குடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன் .

பில்லாவிற்கு பிறகு இருவரும் இணையும் கதை என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது .துணை நாயகனாக ஆரியா நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தாப்சி . ரானா ,கிஷோர் ,அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர் , சுதா ரகுநாத் . என்று மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஆனால் அனைவரையும் அசால்டாக ஓரம் கட்டி விடுகிறார் அஜித்குமார் . இவரை எப்படி காட்டினால் ரசிகர்கள் கைதட்டுவார்கள் என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் . பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஸ்லோ மோஷனில்  நடக்கவிட்டு கைதட்டுகளை அள்ளுகிறார் .

ஆர்யாவின் அறிமுகம்  மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் லேசாக கொட்டாய் விட வைத்தாலும்  பிறகு வேகம் எடுத்து விடுகிறது . படத்தின் இசை யுவன் ஷங்கர்ராஜா பில்லா அளவிற்கு இல்லை என்றாலும் பாடல்கள் நன்றாகவே உள்ளது அதை படமாக்கிய விதமும் கலர்புல் .

டாப்சி குறைந்த மூளை கொண்ட தமிழ் கதாநாயகிகளின் இலக்கணத்திற்கு  கச்சிதமாக பொருந்துகிறார். நயன்தாரா இன்னும் அண்ணி வேடங்களில் நடிக்காமல் தன்னை கதாநாயகியாக தக்க வைத்து கொண்டிருப்பது மிக பெரிய சாதனை. அஜித்திற்கு ஈடு குடுத்து காட்சிகளில் தனித்து தெரிய வேண்டும் என்றால். மிக பெரிய அனுபவம் பயிற்சி தேவை நயனுக்கு அனுபவம் கைகுடுக்கிறது .

 படத்தில் வண்டி வண்டியாக லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது . சர்வர் ஹேகிங் என்பது என்னவோ கடலை மிட்டாய் வாங்குவது போல் சுலபமானது என்று நினைத்துவிட்டார்கள் போல . பத்து நிமிடத்தில் சாட்டிலைட்டின் அப்ளின்கை ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப கொடுமை . துபாய் வங்கியின் சர்வரை ஹாக் செய்ய இவர்கள் போடும் திட்டம். பாரிஸ் கார்னரில் தள்ளுவண்டிகாரனிடம் இருந்து அவனுக்கு தெரியாமல் ஒரு சாத்துக்குடி திருடுவதை விட சுலபமானது கம்பியூட்டர் ஓரளவிற்கு தெரிந்தவர்கள் சிரித்து கொள்வார்கள் . இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு
 திரைகதையின் வேகம் அமைந்துவிட்டதால் படம் பார்பவர்களுக்கு உறுத்தவில்லை.

இந்த படத்திலும் அஜித் பைக் ஓட்டுகிற காட்சி ஒன்று வருகிறது நல்ல வேளையாக அதை அவர் ஒழுங்காக ரோட்டில் ஓட்டுகிறார் . வெறும் பைக்கை காட்டினாலே போதும் ரசிகர்களின் விசில் ஆர்பாட்டம் விண்ணை பிளக்கிறது .
இந்த தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளார் .

Monday, October 21, 2013

குறும்பட குஸ்கா

v

மிக சமீபகாலமாக நிறைய பேர்களுக்கு குறும்படம் எடுக்கும் ஆசை தலைவிரித்து ஆடிகொண்டிருக்கிறது  (என்னையும் சேர்த்துதான்).
அதற்க்கு தேவையான பொருள்கள் என்னவென்றால். ஒரு டிஜிட்டல் கேமரா,சுமார்மூஞ்சி குமார் மாதிரி நான்கு நண்பர்கள்,கொஞ்சம் பணம் அவ்ளோதான். இப்படிதான் நிறைய பேர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

சரி நான் விஷயத்திற்கு வருகிறேன் நேற்று நண்பர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் நண்பர்  நிஷான்னின் குறும்பட வெளியீட்டிற்கு நான் ஆரூர்மூனா செந்தில் ,மற்றும் சில நண்பர்களுடன் ஏ.வி.எம்.ப்ரிவிவ் தியேட்டருக்கு சென்றிருந்தோம்.

படத்தின் பெயர் ஓட்டம் நண்பர் நிஷான் இயக்கி இருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு விமர்சனம் எல்லாம் தேவையா .? இது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைத்தேன் என்றாலும் குறும்படங்களை பற்றிய என்னுடைய புரிதலை பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்.

குறும்படத்திற்கு கதை என்கிற வஸ்த்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒரு சிறு சம்பவத்தை எப்படி சுவாரசியமாக சொல்கிறோம் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. காட்சிபடுத்துவதில் உள்ள வித்தியாசம் உங்களை கவனிக்க வைக்க வேண்டும் . பெரும்பாலும் குறும்படம் எடுப்பவர்கள். அதை தனது விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி சினிமாவிற்க்காண தங்கள் முயற்சியை எடுப்பார்கள். அப்படி என்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் சொல்ல வந்ததை தெளிவாகவும் சுவாரசியமாகவும் சொல்ல வேண்டும். கொஞ்சம் சொதப்பினாலும் படம் பார்ப்பவர்கள் "சரி அதுக்கு என்ன இப்போ" என்கிற மாதிரி முகத்தை திருப்பி கொள்வார்கள்.

ஓட்டம் படத்தில் புதுமையாக எந்த கதாபாத்திரமும் சித்தரிக்க படவில்லை.
நாலு நண்பர்கள் அதே டாஸ்மாக். தேவை இல்லாமல் ஒரு லவ்வு . சரி என்னதான் செய்யபோகிறார்கள் என்கிற எதிபார்ப்பு படம் முடியும் வரை யாருக்கும் வரவில்லை. ஒரு முழுநீள திரை படத்தில் லாஜிக் பிழைகள் வரலாம் அது கூட ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம். ஆனால் வெறும் பதினைந்து நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தில் இத்தகைய லாஜிக் பிழைகள் ஏற்று கொள்ள முடியாதது .

சரி பாத்திரபடைப்பிலாவது ஏதாவது புதுமையாக சிந்தித்து இருக்கலாம். 90களில். வந்த  உதயம், சத்யா, போன்ற படங்களில் வந்த அதேபோன்ற வில்லன். போலிஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரம் வருகிறது அது அபத்தத்தின் உச்சம். அவர் சிவாஜியை மனதில் வைத்து கொண்டே நடித்திருப்பார் போலும். குறும்பட நடிப்பு என்பது எதார்த்தர்க்கு  மிக நெருக்கமாக இருக்க வேண்டும். ஒரு டோஸ் அதிகம் ஆனாலும் பார்க்க சகிக்காது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால் தேவையற்ற காட்சிகள் அறவே இருக்க கூடாது.

அடுத்ததாக வசனம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு பவர்புல்லாக அந்த காட்சி இருக்கும். வழ வழ வசனங்கள் நிச்சியம் படத்திற்கு  மைனஸ்தான். நகைச்சுவையை காட்சியாக சித்தரிப்பது என்பது வேறு. அதை சொல்வது என்பது வேறு. நகைச்சுவையை காட்சியாக சித்தரிக்கும் போது அதில் இயக்குனரின் திறமை மட்டுமே முக்கியம். வசனத்தின் மூலம் அதை காட்சி படுத்தினால் அதில் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறும்படங்களுக்கு வசனம் குறைவு என்பதால் முடிந்த வரை குறியீடாகவே அதை பயன்படுத்துவார்கள். கதாபாத்திரங்கள் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவுவது நமக்கு பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ஓட்டம் பீஸ் இல்லாத பிரியாணி. 

நண்பருக்கு நல்ல படம் எடுக்கும் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. இது அவரது முதல் படம் என்பதால் பிழைகளை அதிகம் சுட்டிக்காட்ட மனம் வரவில்லை.  தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்தமுறை தவறுகள் இல்லாத சிறந்த படம் எடுப்பார் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

படத்தின் டீசரை இங்கே பார்க்கவும் .





       
     

            

Popular Posts